பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

149

 தன்னைப்போல் ஒரு பெண்-சக மாணவி-கெஞ்சியும் கனகராஜ் விட்டுக் கொடுக்க முன்வராததோடு பெருந்தன்மை யாக நடந்துகொள்ளவும் இல்லை என்று தோன்றியது சுலட்சணாவுக்கு. இந்தச் சிறிய விரோதம் ஒரு மனத்தாங் லாகவே அவளுக்குள் தங்கி உறைந்து போயிற்று. ஒரு பெண்ணிடம் ஆண் காட்ட வேண்டிய இங்கிதத்தை அவன் காட்டத் தவறிவிட்டதாகவே அவள் நினைத்தாள்.

பொருளாதார எம். ஏ. முதலாண்டு வகுப்பில் டேஸ்காலர் களாகப் பதினெட்டுப் பேர்தான் சேர்ந்திருந்தார்கள். இந்தப் பதினெட்டுப்பேரில் சுலட்சணா உட்படப் பெண்கள் ஏழுபேர். ஆண்கள் பதினொருவர். மாணவர்களில் மிகவும் "ஸ்மார்ட் என்று பெயரெடுத்தவன் கனகராஜ். பெண் களில்-அதாவது-மாணவிகளில் மிகவும் அழகானவள் என்று மட்டுமில்லாமல்-சூட்டிகையானவள் என்றும் பெய ரெடுத்தவள் சுலட்சணாதான். -

எங்கும் எதிலும் தனக்கு ஒரு முகராசி உண்டு என்ற நம்பிக்கையோடு துணிந்து முயல்கிறவள் அவள். பல சந்தர்ப்பங்களில் பல காரியங்களில் அவள் நினைத்தது . நினேத்தபடியே நடந்திருக்கிறது. இன்றும் அப்படி நடத் திருக்கமுடியும். ஆனால் அந்தப் பாழாய்ப்போன லைப்ரேரியன் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் என்று. எதையோ சொல்லிப் புத்தகத்தைக் கனகராஜிடம் எடுத்துக் கொடுத்து விட்டார். இதில் நூலகர் மேலும் அவளுக்கு வருத்தம்தான். தன்னுடைய வாய்ப்பு நழுவிப் போக முன் நின்று உதவியவர் அவர்தான் என்று நினைத்தாள் அவள்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை மிகவும் புகழ்பெற்றது. நாட்டின் பொறுக்குமணிகளான பல பொருளாதார நிபுணர்கள் மாணவப் பருவத்தில் அங்கு உருவானவர்கள்தான். முதல்பட்டத்தில்-அதாவது ஃபர்ஸ்ட் டிகிரியில் பொருளாதாரத்தில் கணிசமான மதிப்பெண்கள்