பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

151

வேண்டாமா என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் மேல் கூட அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

அந்த முறையும் ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ரீடிங்'குக்கான இண்டெர்னல் மதிப்பீட்டில் கனகராஜ் தான் முதல் மாணவனாக வரப்போகிறான் என்ற குமுறலோடுதான் அன்று மேற் பட்டப் படிப்பு நூலகத்திலிருந்து அவள் வெளியேறியிருந்தாள்.

ஆனால் இந்தக் குமுறல் எல்லாம் மாலை ஆறுமணிவரை தான். ஆறு மணிக்கு மாணவர் விடுதியைச் சேர்ந்த பையன் ஒருவன் அவளேத் தேடி வந்து ஒரு சிறு கடிதத்தையும், பகலில் நூல்நிலையத்தில் அவளுக்குக் கிடைக்க விடாமல் கனகராஜ் தட்டிக் கொண்டுபோன அந்தப் புத்தகத்தையும் கொடுத்தபோது அவளுக்கு முதலில் வியப்பும் பின்பு கனகராஜ் மேலும் அவன் குடும்பத்தினர் மீதும் அநுதாபமும் ஏற்பட்டன.

“மிஸ் சுலட்சனா! என் தாய் மிகவும் சீரியலாய் இருக்கிறாள் என்று என்னே உடனே அழைத்து வரச் சொல்வித் தந்தை கார் அனுப்பியிருக்கிறார். நான் இந்த வினாடியே சேலம் விரைகிறேன். புத்தகத்தை நீங்களாவது படித்துப் பயன்படுத்தித் திங்கள் கிழமை இண்டர்னல் அசெஸ்மெண்ட் மதிப்பெண்களைப் பெற வேண்டுகிறேன்-” என்று கடிதத்தில் எழுதியிருந்தான் கனகராஜ்.

சுலட்சனாவுக்கு உடனே அவன் மேலிருந்த கோபம் எல்லாம் போய், பொறாமை எல்லாம் கழன்று, ஐயோ பாவம்! இத்தனை பதற்றமான சூழ்நிலையிலும் புத்தகம் கிடைக்காத தால் நான் அடைந்த ஏமாற்றத்தை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்து தனக்குப் பயன்படாமற் போனது எனக்காவது பயன்படட்டும் என்ற எண்ணத்தோடு சிரத்தையாகக் கொடுத்தனுப்பியிருக்கிறாரே" -என்று அவன்மேல் அநுதாபமாகவும் அன்பாகவும் மாறியது. படிக்கிற-நன்றாகப்