பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

158

காம்பஸுக்குள் இரண்டு மூன்று கண்மாய்களும், ஏரிகளும் தற்செயலாகச் சிக்கி இருந்தன. ஏரிகள் கண்மாய்களை ஒட்டிய பகுதி பசுஞ்சோலையாகவும், மற்ற இடங்கள் பொட்டலாகவும் இருக்கும். பல்கலைக் கழகங்களுக்குரிய போராட்டங்கள், பிணக்குகள், பூசல்களைத் தவிர்ப்தற்காகவே காம்பஸுக்குள் ஐநூறு அறுநூறு மாணவர்களுக்கு மேல் தங்காதபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகுலும் கோ-எஜுகேஷன் இருந்ததாலும், வேறு சில பிரச்னைகள் அவ்வப்போது கிளம்பியதாலும், சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படத்தான் செய்தன.

கலைப்பிரிவு மாணவர்களுக்கும் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தகறாறு. விவசாயப் பிரிவு மாணவர்களுக்கும் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் போர், மருத்துவப் பிரிவு மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகளுக்கும் போர் என்றெல்லாம் பூசல்கள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்தன. காம்பஸ்-க்கு உட்பட்ட பிரச்னைகள் காரணமாக சில சமயங்களிலும் காம்பஸுக்கு வெளியே உண்டாகும் மாநில அளவிலான பிரச்னைகள் காரணமாகச் சில சமயங்களிலும் மாணவர்களிடையேயும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் கிளம்பின.

இன்றைய மாணவன் என்பவன்-அதாவது இருபத்து ஒன்றாவது நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகக் காத்திருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சுற்றி நிகழும் தேசிய சர்வதேசியப் பிரச்னைகளைக் கவனிக்காமலும் அவை பற்றிக் கவலைப்படாமலும் புத்தகங்களிலோ, வகுப்பறைகளிலோ மட்டுமே தன்னைப் புதைத்துக் கொண்டு பாராமுகமாக இருந்துவிட முடியாது. அவன் பிரச்னைகளைப் பாரா முகமாக இருப்பதும் சாத்தியமில்லே. பிரச்னைகள் அவனைப் பாராமுகமாக விட்டு விடுவதும் சாத்தியமில்லை. எல்லார் மேலுமாகப் படுகிற காற்றில், மழையில், வெயிலில், பனியில் அவனும் பாதிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும். இன்றைய சமூக அரசியல்