பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

163

‘பல்கலைக் கழகமா? பாலை வனக் கலகமா?’-போன்ற அட்டைகள் பெரிது பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தன.

முதல் நாள் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தவுடன் கலைப்பிரிவு மாணவர்களில் இருபது மரத்தடியில் மாணவகளுக்குத் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் அநுதாப உண்ணாவிரதம் தொடங்க ஒத்துழைத்தனர்.

அந்தப் பத்துப் பேரில் கனகராஜ் இல்லை என்பது சுலட்சணாவுக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. அவன் உண்ணாவிரதமிருக்க முன்வராதது கூடப் பரவாயில்லை. உண்ணா விரதமிருப்பவர்களை வந்து பார்த்தால் கூடத் தன் மீது கெட்ட பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடும் என்று பயந்தாற் போல ஒதுங்கினான் கனகராஜ். அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முன் வரவில்லை.

மூன்றாவது நாள் மாணவிகளுக்கு ஆதரவாகப் பொறியியல் பிரிவு மாணவர்கள்-எம். டெக். படிப்பவர்கள் மற்றொரு மரத்தடியில் உண்ணாவிரத்தைத் தொடங்கினர்கள்.

யூனிவர்ஸிடி அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸின் முகப்பில் பெரும்பகுதி உண்ணாவிரத கோஷ்டிகளால் கேராவ் செய்யப்பட்டதுபோல ஆகிவிட்டது. சுற்றி வளைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

நான்காவது நாள் மெடிகல், விவசாயப்பிரிவு மாணவர்களும் சேரவே பிரச்னை பெரிதாகிவிட்டது. உண்ணாவிரதம் பெரியதாக விசுவரூபம் எடுத்தது.

சுலட்சணாவைப் பசியும் வாட்டமும் வாழை நாராக ஆக்கியிருந்தன. அவளருகே உண்ணுவிரதத்துக்கு உட்கார்ந்திருந்த மணிமேகலை என்ற சக மாணவி ஒருத்தி *சுலட்சணா! சினிமாக் கதாநாயகன் மாதிரி உங்கூட ஒரு ஸ்டேண்ட் சதா சுத்திண்டிருப்பானே, அவன் மட்டும் உன்னை வந்து பார்க்கவே இல்லையேடி? லீவா? அல்லது அவன் ஊரில்