பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

சுலட்சணா காதலிக்கிறாள்

இல்லியா?"-என்று அவளையே கேட்டபோது சுலட்சணாவுக்கு அப்படியே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது.

கனகராஜ் ஒரு முறைக்காகக் கூட உண்ணாவிரதமிருந்த மாணவிகளை வந்து பார்க்காதது சுலட்சணாவுக்கு எரிச்சலூட்டியது. மற்ற மாணவிகளைப்பற்றிக் கவலை இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் தன்னைப் பார்க்கக் கூட அவன் வரவில்லை என்பது அவளுள் மிகவும் உறுத்தவே செய்தது. ஒரு ஒப்புக்காகக் கூட அவன் அதைச் செய்ய முன் வராதது அவளுக்கு வியப்பை மட்டுமில்லாமல் அதிர்ச்சியையும் அளித்தது.

ஸ்டிரைக், உண்ணாவிரதம், ஹர்த்தால், ஆர்ப்பட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ‘இண்டேர்னல் அஸெஸ்மெண்ட், மார்க்கு’களை மிகமிகக் குறைத்துவிடச் சொல்லி ஆக்டிங் வி.சி. ஓர் இரகசியச் சுற்றறிக்கை எல்லா இலக்காக்களுக்கும் அனுப்பியிருக்கிறார் என்று மாணவ மாணவிகளிடையே பரவலாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் அது வெறும் பூச்சண்டி காடடும் ஏற்பாடாகப் பரப்பப்பட்ட வதந்தியே ஒழிய உண்மையில்லை. கனகராஜ் முன்பு ஒருமுறை இதை அவளிடம் சொல்லிப் பயமுறுத்தியபோதுகூட அவள் இதை நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை.

“உங்களைப்போன்ற புத்தகப் புழுக்களும், பயந்தாங் கொள்ளிகளும் சுயநலத்திற்காகவே முயற்சி செய்து திட்டமிட்டுப் பரப்புகிற வதந்தி இது உண்மையில் அப்படி எதுவும் கிடையாது”-என்று சுலட்சணாவே அப்போது அவனிடம் மறுத்திருந்தாள். இப்படி நினைத்த கனகராஜுக் காக அவள் பரிதாபப்பட்டாள்.

சுலட்சணாவின் உண்ணாவிரதத்தை உள்ளுரின் பிரமுகர் ஒருவர் வந்து பழரசம் கொடுத்து முடித்துவைத்தார். பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்தது. உடனடியாகக் கிணறு-