பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சுலட்சணா காதலிக்கிறாள்

வில்லையே? போராட்டம் நடத்துகிற நூற்றுக்கணக்கானவர்களின் பக்கம் தலையைக் காட்டினால் நிர்வாகத்தினரும் மார்க் போடுகிற ஐந்தாறு பேராசிரியர்களும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து அவன் ஒதுங்கி ஒளிந்தது மிக மிகக் கேவலமான காரியமாக அவளுக்குத் தோன்றியது. அவள் பார்வையில் அவனுடைய இமேஜ் ஒரு புழுவாகக் குறுகிச் சிறுத்தது.

அந்த வாரம் வகுப்பில் ஒரு பேராசிரியரே பேச்சு வாக்கில் அவளேக் குறிப்பிட்டுத் தம்முடைய மனப்பூர்வமான பாராட்டுக்கக்ளத் தெரிவித்தபோது கனகராஜுக்கு அதிர்ச்சி. யாயிருந்தது. அவள் அவனே வெற்றிப் புன்முறுவலோடு பார்த்தாள்.

பொருளாதாரத்தில் முதல் தர மதிப்பெண் பெற்ற அவனைப் பாராட்டுவதற்குப் பதில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அவளேப் பாராட்டினார் பேராசிரியர். “படிப்பில் கவனக்குறைவால்தான் இப்படிப் போராட்டங்கள் வரும் என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். உரிமை உணர்வுள்ள யாரும் இப்படிப் போராடி நியாயம் பெறத்தான் முடிவு செய்வார்கள். இதில் தவறே அத்து மீறலோ சிறிதும் இல்லை. இதை ‘ஆர்கனைஸ்’ செய்த நேர்த்திக்காக மிஸ் சுலட்சணாவுக்கு என் பாராட்டுக்கள்”-என்றார் அந்தப் பேராசிரியர். கனகராஜும் வகுப்பில் இருந்தான். அப்போது அங்கு எல்லாரும் எதற்காகவோ தன்னையே பார்ப்பது போல் அவன் உடம்பு கூசியது.

4

எல்லாரும் சுலட்சணாவை மதித்துப் புகழ்ந்தபோதுதான் கனகராஜ் அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்பது போல் உணரத் தலைப்பட்டான். அவள் மெல்ல மெல்ல,