பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

173

தோழமையோடு பழகினாள் இந்தத் தோழமையை அவன் எப்படிப் புரிந்து கொண்டானே, புரிந்து கொள்ளவில்லேயோ, அவள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாள். உணர்ந்து கொண்டிருந்தாள். உணர்ந்து தெளிந்து கொண்டுமிருந்தாள்.

ஒரு விடுமுறையின் போது பல்கலைக்கழகத்தை ஒட்டிச் சென்ற ஜி. எஸ்.டி-அதாவது கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே தள்ளி இருந்த ஒர் அரிஜன கிராமத்திற்குச் சாக்ல போட்டுக் கொடுக்கும் இலவச சேவையைத் திட்டமிட்டாள் சுலட்சணா.

சமூக சேவைத் திட்டத்தின் கீழ் யூனிவர்சிடி நிர்வாகத்தைச் சம்பந்தப்படுத்தாமலே அவளாகப் பொறுப்பேற்று இதைமனிதாபிமான அடிப்படையில் ‘ஆர்கனைஸ்’ செய்தாள் நிறைய மாணவ-மாணவிகள் சேர முன்வந்திருந்தனர்.

யூனிவர்ஸிடி நிர்வாகமே இம்மாதிரி ‘சோஷியல் செர்வீஸ் லீக்' என்று சமூக சேவைப் பணிகளைச் செய்யச் சொல்லி அதற்கு மார்க்குகள் போடச்செய்வது வழக்கம். ஆனால் அந்தச் சமூக சேவைப் பணி வெறும் கண்துடைப் பாகவே இருக்கும். யூனிவர்ஸிடி காம்பவிற்குள் புதர்களே வெட்டி ஒழுங்கு செய்வது-புல்வெளிகளைச் சமன் செய்வது போன்று பல்கலைக் கழகத் தோட்டக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையை மாணவர்களிடம் ஒசியிலேயே வாங்கிக் கொண்டு-மார்க் போட்டு முடித்துவிடுவார்கள்.

உண்மையில் ‘சோஷியல் செர்வீஸ் லீக்' என்பது வெளி உலகின் பொதுப் பணிகள் எவற்றையாவது பிரதிபலன் கருதாமல் மாணவர்களைச் செய்ய வைப்பதே ஆகும். இதற்காக மாணவர்களின் கட்டணத்திலே கூட ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை மொத்தத்தில் வேறு எதற்கோ திருப்பி விடப்படுவதோடு பல்கலைக் கழக நிர்வாகம் செலவழித்துச் செய்ய வேண்டிய காரியங்களை மாணவர்களை வைத்தே முடித்துவிடுகிற