பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

179

இருக்கிறதைப் பத்து வருஷமாப் பழகியாச்சு. இனிமே நான் என்ன மாத்திக்க முடியாது.”

“நீங்கள் மட்டுமில்லை மிஸ்டர் கனகராஜ்! இந்நாட்டு மக்களில் பலர் தாங்களாகவே தங்களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளத் தயாராயிருக்கமாட்டார்கள். காலம்தான் அவர்களை மாற்றவேண்டும். மாற்றும் என்று நினைக்கிறேன்."

“நீ நினேக்கிறபடி எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக இந்த நாட்டில் எதுவும் நடந்துவிடாது சுலட்சணா!”

“மனிதனை என்றும் மாறாமலிருக்க நிர்ப்பந்தப்படுத்தும் மதம், சடங்குகள், சம்பிரதாயங்களிலிருந்து அவனை உடனே மாற்ற முயலும் விஞ்ஞானம் வித்தியாசமானது. விஞ்ஞானத்துக்கும் மதத்துக்கும் உள்ள குளிர்யுத்தத்தில் இளைஞராகிய நீங்கள் விஞ்ஞானத்தின் பக்கமில்லை என்பதுதான் மிகவும் துயரமான விஷயம்.”

“விஞ்ஞானத்தின் பக்கத்திலும் மதத்தின் பக்கத்திலும் நான் இருக்கிறேனா இல்லையோ, நிச்சயமாக உன் பக்கம் இருக்கிறேன். உன்னைப் போல ஓர் அழகிய பெண்ணின பக்கமாக நெருங்கி நிற்பதற்குப் பெருமைப்படுகிறேன். நீ நடத்துகிற சோஷியல் செர்வீஸ் ‘லீக்’ முகாமில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் என் உதவி உனக்கு உண்டு சுலட்சணா! இந்த இதை என்னுடைய ‘ஹம்பிள் டொனேஷனாக’ ஏற்றுக்கொள்” என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்து அவளிடம் நீட்டினான் கனகராஜ். அவள் உதாசீனமாகச் சிரித்தாள்:

“தயவுசெய்து மன்னிக்கவும். எங்களுக்கு வேண்டியது உழைப்பு. வெறும் பணம் மட்டுமில்ல. சேவையைத் தர விரும்பாத-சேவைக்கு ப்ராக்ஸியாகத் தரப்படுகிற பணத்தை நாங்கள் வாங்குவதில்லை”-என்று நிர்த்தாட்சண்யமாக