பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சுலட்சணா காதலிக்கிறாள்

விட்டது. ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யச் சொல்லலாம் என்று சுற்றி நின்ற கும்பலில் கனகராஜின் முகத்தைத் தேடினாள் சுலட்சணா. அவனைக் காணவில்லை. கும்பலில் மட்டுமில்லை. கும்பலுக்கு அப்பாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கனகராஜ் தென்படவே இல்லை. பயந்து ஓடிப் போயிருப்பானோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது.

அங்கே பக்கத்தில் இருந்த போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லி அங்கிருந்தே ஆம்புலன்சுக்கும் ஃபோன் செய்வதாகக் கூறிவிட்டு யாரோ ஒருவர் விரைந்தார். கனகராஜ் மட்டும் ஆள் அகப்படவே இல்லை. எங்கே போனானோ? சுலட்சணா துணையின்றி நிராதரவாகத் தவித்தாள். ரவுடியைத் துரத்திக்கொண்டு ஓடின அந்த மூன்று மாணவர்களும் திரும்பி வந்து சேரக் கால்மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமியின் உடலிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்றும் பயமாயிருந்தது சுலட்சணாவுக்கு. அவனைக் காப்பாற்றப் பதறினாள்.

போலீஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்தது. அவளிடமும் நடைபாதைப் பெண்மணியிடமும் ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொண்டு முடித்து ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது ஆம்புலன்ஸ். சுலட்சணாவும் ஆம்புலன்ஸில் வீராசாமியுடன் சென்றாள்.

அந்த இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் கிளம்புவதற்குள்ளேயே எப்படியோ தகவல் எட்டிப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்து விட்டனர். அவர்களால் பஜாரில் ஏதேனும் கலகம் மூண்டு விடக் கூடாதே என்று போலீஸார் முன்னெச்சரிக்கை உணர்வு அடைந்தனர். கூட்டம் கூடாமல் கலத்தனர்.

“இந்த நாளில் சர்ஜரியில் விநோதங்கள் எல்லாம் நடக்கின்றன. வலது மணிக்கட்டை அப்படியே ஒட்ட வைத்து