பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

சுலட்சணா காதலிக்கிறாள்


ப்ளஸ் பாயிண்டும் கனகராஜின் மைனஸ் பாயிண்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து பளீரென்று கண்களை உறுத்தின.

வீராசாமி ரோஷ உணர்ச்சி நிறைந்த ஆண்பிள்ளை. கனகராஜ் ரோஷ உணர்ச்சி கூட மழுங்கிப்போகிற அளவு எல்லையற்ற நாகரிக மெருகு ஏறித்தேய்ந்திருந்தான். பிரச்னைகளைக்கண்டு எதிர் கொள்வதற்குப் பதில் பயந்து விலகி ஓடினான். பஜாரில் கலகம் மூண்டதும் அந்த இடத்தில் நிற்பதற்கே பயந்து ஓடிவிட்டவனுக்கும் - பாதையோடு போய்விடாமல் தேடிவந்து பிரச்னையில் சிக்கிக் கொண்டு இரண்டு பெண்களுக்கு மரியாதை அளித்தவனுக்கும் என்ன வித்தியாசமோ அந்த வித்தியாசம்தான் அவர்களிடையேயும் இருந்தது. வீராசாமி முகம் மலராமல், சிரிக்காமல், மெளனமாக அவளை வென்று முடித்திருந்தான்.

8

பூசிக்கொள்ள மஞ்சளும் அணிந்துகொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னைக்கேவலப்படுத்திய நாளில் இருந்து கனகராஜ் அவளைச் சந்திக்க முயலவில்லை. விரக்தியும், வேதனையும் அவனை வாட்டின. ஆள் அரை ஆளாக வாட்டம் அடைந்திருந்தான். முகம் பேயறைந்த மாதிரிப் போயிருந்தது. சுலட்சணாவோ வீராசாமியை உற்சாகமாக வைத்துக் கொள்ளக் கருதி மாலை வேளைகளில் அவனோடு உலாவச் செல்வது, அவனைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, அவனோடு கடைத் தெருவுக்குப் போவது என்று முனைந்திருந்தாள். இந்த மாறுதலை அனைவருமே பாத்தார்கள். புரிந்து கொண்டார்கள்.

கனகராஜைத் தவிர வேறு இரண்டு மூன்று சேலத்து மாணவர்களும் அங்கே உதியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்கள்.