பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

207


"ஏதேது இந்த விஷயம்பற்றி என்னிடம் ஒரலாக ஒரு ரிஸர்ச் தீஸிஸே ஸப்மிட் செய்து விடுவாய் போலிருக்கிறதே...'

சுகவனம் இதைக் கேட்டுச் சிரித்தான். டீன் சேலத்தி லிருக்கம் கனகராஜின் தந்தையோடு எஸ்.டி.டி. போட்டுப் பேசுவதற்காக உள்ளே சென்றார், சுகவனம் அவரிடம் விடை பெற்றுத் தன் அறைக்குத் திரும்பினான்.

சுலட்சணாவைப்போல ஒர் அழகிய பெண்ணை வீராசாமி யோடு சேர்த்துப் பார்ப்பது அவனுக்கும் கூட என்னவோ போல்தான் இருந்தது. அனால் அது தவிர்க்க முடியாதது என்றும் கூடவே மனத்திற்குள் உறைத்தது. சற்றுமுன் பல்கலைக்கழகப் பூங்காவில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்துவிட்ட எதிர்பாராத அதிர்ச்சியின்போதுகூட அவள் சகஜமாக "ஹலோ" என்று கனகராஜைப் பார்த்து முகமலர்ந்து சமாளித்ததையும், கனகராஜ் அவளைப் பார்க்க விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டதையும் சுகவனம் கவனித்திருந்தான்.

கனகராஜின் இந்தக் குணம் சுகவனத்துக்கே எரிச்ச லூட்டியிருந்தது! பொதுவில் தனக்கு உவப்பில்லாதசாதகமாகாத சூழ்நிலையை எதிர்கொள்ளவே பயந்து கூசும் குணமுள்ள இவன் எதிர்காலத்தில் எப்படித் தன் தந்தை இன்று நிர்வகித்து வரும் தொழில் நிர்வாகங்களையும் நிறுவனங்களையும் தான் பொறுப்பு ஏற்று நடத்தப் போகிரறான்? இந்தத் தொட்டால் சிணுங்கி மனப்பான்மை பொதுவாழ்க்கைக்கே பயன்படாத மைனஸ் பாயிண்ட் ஆயிற்றே? எதிர்பாராததை எதிர்கொள்ள நேர்ந்தாலே பயந்து கலவரப்பட்டு ஒதுங்கி ஓடிவிடும் இந்தக் குணத் தோடு இவன் எப்படி வாழ்வில் வெற்றிபெறப் போகிறான்?

பெண்கள்-அுவும் மிக மிக ஸ்மார்ட்டான இளம் பெண்கள் இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை,