பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சுலட்சணா காதலிக்கிறாள்

 இருப்பான். அநாவசியமா ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டான். நீ அவனைப் புரிஞ்சுக்கனும் அம்மா!'

“அந்த மாதிரி ஆளை இந்தக்காலத்திலே ஒரு மியூஸியம் கட்டி அதிலே உட்காரவச்சு ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்'னு ஒரு போர்டு எழுதி மாட்டினாக்கூட ஒருத்தரும் சீந்த மாட்டாங்க. நம்முடைய காலத்து மனிதன் என்பவன் நம் காலத்து வம்பு தும்புகளில் ஈடுபட வேண்டும். நம் காலத்து நல்லதை ஆதரிக்க வேண்டும். தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். ஒதுங்கி நின்றுகொண்டிருப்பவன் உயிருள்ளவனே அல்ல! நீச்சல் தெரிந்தவர்கள் கரையிலே நிற்கக் கூடாது.' ” “உங்களுக்குள்ளே என்ன சண்டை? மனஸ்தாபமா? விரோதமா? நான் தெரிஞ்சுக்கலாமா அதை? ” “நீங்க இப்போ யாரைப்பற்றி, எந்தச் சண்டையைப் பற்றிக் கேட்கிறீங்க சார்?'”

“உனக்கும் கனகராஜுக்கும் ஆகாமற் போனதைப் பற்றித்தான் கேட்கிறேன்.”

“அதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்களே சொன்னுீங்களே சார், அவர் ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்னு அப்படிப்பட்ட பரம சாத்வீக புருஷரோட எனக்கென்ன சார் சண்டை வரப்போகிறது?” -

நீ என்னிடம் மறைக்கப் பார்க்கிறாய்?"

'எதை மறைக்கப் பார்க்கிறேனாம்...?"

'உனக்குக் கனகராஜ் மேல் என்ன கோபம் என்பதற்கான காரணத்தை...?'

“ஒருவரை நாம் கோபித்துக்கொள்ள அவர்மேல் நமக்கு ஏதாவது உரிமை இருக்கவேண்டுமே? அப்படி எந்த உரிமையும் கனகராஜ் மேல் எனக்கு இருந்ததில்லையே சார் ”