பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

217


போதாது. ஆனல் இரக்கத்தையும் அதுதாபத்தையும் தவிர நான் அவருக்குத் தர வேறு எதுவுமில்லே சார்!"

"உன் பதில் எனக்குப் பெரிய ஏமாற்றம்தான் அம்மா..."

"ஒரு டீன் என்ற முறையில் இது உங்களுக்கு ஓர் அநுபவம் மட்டும்தான். கனகராஜின் குடும்பத்துக்கு வேண்டியவர் என்ற முறையில் வேண்டுமானல் ஏமாற்றமாயிருக்கலாம். அதை நீங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் சார்!"

-அவர் அவளுக்கு விடை கொடுக்கும்போது இரவு அதிக நேரமாகியிருந்தது. லேடீஸ் ஹாஸ்டல் கேட்டில் உள்ளே விடத் தகராறு செய்தால் தம்மைப் பார்க்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும்படி அவளிடம் முகப்புவரை அவன் வழியனுப்ப வந்தபோது சொன்னார் அவர்.

அவள் டீன் குடியிருப்பிலிருந்து வெளியேறிச் சென்றாள். சுற்றி வளைத்து டீன் உரையாடலைத் தொடங்கிய விதமும் கடைசியிலே வேறு வழியின்றி நேரடியாகக் "கனகராஜைக் கை விட்டு விடாதே! அவன் உடைந்து தூள் தூளாகி விடுவான்" என்ற கோரிக்கையில் கொண்டு வந்து முடித்த விதமும் அவள் முற்றிலும் எதிர்பார்த்திராதவை, வேறு ஏதாவது அரட்டல் மிரட்டல் விவகாரத்திற்காகவே டீன் கூப்பிட்டனுப்பியிருப்பார் என்றுதான் கோபத்தோடு அவள் கிளம்பி வந்திருந்தாள். வந்தபின் கோபத்தை விடப் பரிதாபமே அவளுக்குள் அதிகமாகியிருந்தது.

கனகராஜின் தந்தை புரோ-சான்ஸ்லரின் நண்பர், கோடீசுவரர் என்பனபோல் டீன் மூலம் அப்போது தெரிந்து கொண்ட உண்மைகள் அவள் அபிப்ராயத்தில் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை என்ருலும் டீன் எதற்காக மெனக்கெடுகறாரர் என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது. டீனின் போக்கு அன்று மிகமிகச் சுபாவமாகவும் ஏறக்குறையக் கெஞ்சுவது போலவும் அமைந்திருந்தது. அறைக்குத்