பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சுலட்சணா காதலிக்கிறாள்



அட்டெண்டன்ஸ் போயிடுமே சார்!'

பரவாயில்லை சுகவனம் எல்லா விவரமும் வந்து சொன்னான், கொஞ்சநாள் நீ இங்கே தனியா ஹாஸ்டல்லே இருக்க வேண்டாம். உன் நன்மைக்குத்தான் சொல்றேன். ஒரு மாறுதலா இருக்கட்டும். ஊர்ப்பக்கம் போயிட்டு வா...'

சார்...'

'ஆனா ஊர்ல போயும் இதையே நினேச்சுக் கஷ்டப் படாதே. உனக்கென்ன குறை? நல்ல குடும்பம். பண வசதி-படிப்பு எல்லாம் இருக்கு. இவளை மறந்துடு, ரதியா ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு உனக்குக் கழுத்தை நீட்டுவாங்க. நல்ல அழகியாகவே கிடைப்பாள். கவலைப்படாதே. இவ வெறும் அன்னக்காவடி, யாரோ டிரேட் யூனியன் லீடரோட பொண்ணு. நீ இங்கே திரும்பி வாணும்னு மறுபடி இந்தச் சுலட்சணாவே மனசு மாறி உங்கிட்டப் பல்லே இளிச்சுக்கிட்டு வந்துநின் னுக்கூட, போடீ! உன்னை எவன் கண்டான்?’னு கேட்கிற திமிரோட வரணும்.'

அவன் அவரது அந்த வார்த்தைகளுக்கு அஞ்சி மிரண்டு ஓர் ஒப்புக்காகக் கிளிப்பிள்ளை போலத் தலையை ஆட்டினான். . . . . -

போன் போட்டுத் தரட்டுமா? உங்க அப்பாவோடப் பேசறியா?" . . .

வேண்டாம் சார். நீங்க பேசினதே போதும். கரர் வந்ததும் நான் ஊருக்குக் கிளம்பத் தயாராகனுமே...?"

"ஆமாம், நேத்து இராத்திரியே சுகவனம் வந்து சொன்னதும் உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணியாச்சு. கார் இப்ப இன்னும் கொஞ்ச நேரத்திலே வந் துடும்.'