பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

221


கனகராஜ் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். அவன் விடுதிக்குத் திரும்பிப் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது லேடிஸ் ஹாஸ்டல் மெஸ் பையன் அவனைத் தேடிக் கொண்டு ஒரு கடிதத்தோடு வந்தான்.

உறையிலிருந்த எழுத்திலிருந்து, கடிதம் சுலட்சணாவிடமிருந்து என்று தெரிந்தது.

“கொஞ்சம் இருப்பா! நான் சொன்னப்புறம் நீ போகலாம்”

பையன் அறைக்கு வெளியே போய்க் காத்திருந்தான். வேகமாக அடித்துக் கொண்டு பதறும் நெஞ்சுடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானான் கனகராஜ். கடிதம் ரொம்ப ரொம்பச் சுருக்கமாக இருந்தது.

அன்புள்ள கனகராஜ்! நேற்றுப் பல்கலைக்கழகப் பூங்காவில் சவுக்கு வேலிக்கு இப்பால் நானும் வீராசாமியும் உட்கார்ந்திருப்பது தெரியாமல் நீங்கள் உங்களுடைய ஊர்க்கார நண்பர், எம்.டி. படிக்கும் சுகவனத்திடம் பேசிக் கொண்டிருந்ததை முழுவதும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நான் ஒட்டுக்கேட்க நேர்ந்தது. நான் காகலிக்கிறேன், சுலட்சணாதான் காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை என்பதாக உங்கள் நண்பரிடம் நீங்கள் அழமாட்டாக் குறையாக முறையிட்டதை நானும் கேட்டேன். இன்னமும் இதற்குப் பதில் சொல்லாமலிருப்பது என் தரப்பில் நியாயமில்லை. இதோ என் பதில்

சுலட்சணாவும் காதலித்தாள். காதலிக்கிறாள். காதலிப்பாள். ஆனால் அவள் ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத பேதைப் பருவத்துப் பெண் குழந்தை இல்லை, அழகிய பொம்மைகளைக் காதலித்து அவற்றோடு விளயாடும் பருவம் கடந்துவிட்டது. தான் காதலிக்கிற