பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

225



பதில் அவன் சட்டை பொய்யாய்த் தொங்குவதைக் காரிலிருந்தே பார்த்தான் கனகராஜ்.

இவளைப்போல ஒரு பேரழகி இப்படிக் கூட நடந்து வருவதாயிருந்தால், கைகள் மட்டுமென்ன, கால்களைக் கூடத் துணிந்து இழக்கலாமே?-என்று மனத்தில் தோன்றியது. -

இன்று நினைப்பிலே தோன்றும் இந்தக் கழிவிரக்கமான, துணிவு அன்று பஜாரில் அந்தச் சம்பவத்தின் போது நிஜமாகவே தோன்றியிருந்தால் சுலட்சணாவே தன்னைக் கைவிட்டிருக்க மாட்டாள் என்றும் சேர்ந்தே தோன்றியது. எல்லாம் கழிவிரக்கமான, இப்போது பயன்படாத வெறும் நினைவு மட்டுமே. இனி இந்த நிகனவுகளால் யாருக்கு என்ன பயன்? கார் காம்பஸை விட்டு வெளியேறி ஜி. எஸ். டி. நேஷனல் ஹைவேய்ஸ்-க்கு வந்தபோது பல்கலைக் கழகக் கட்டிடங்களும் மரக்கூட்டங்களும் அவை சார்ந்த காட்சிகளும் பார்வையிலிருந்து விலகி மறைந்தன. அவனுள் ஏதோ பாறையாக உறுத்தி அழுத்தியது. நெஞ்சில் ஒரே வலி. வேதனைக் கனம்.

கனகராஜ் சட்டைப்பையிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு டிரைவிருக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல மெளனமாக அழுதான். கர்சீப் நணைந்தது. கோழைகள் வேறென்ன செய்ய முடியும்? இப்படி அழத்தான் முடியும் பாவம்!

12

கனகராஜ் சேலத்துக்கு வந்து சில மாதங்கள் கழிந்தன. நாட்கள் முடமாகி நொண்டி மெதுவாக நகர்ந்தன நடந்தன. அவன் மனநிலை தேறவேண்டும் என்று அவனுடைய தந்தை தம்மால் முடிந்த விதங்களில் எல்லாம் முயன்று செலவழித்து என்னென்னவோ உற்சாகப்படுத்திப் பார்த்தார். உதயா பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர் சுகவனம் எழுதி