பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

21


"என்னமோ நீ சொல்றே... எத்தனே பேர் நாம சொல்றதெல்லாம் நம்பப் போறாங்க? எங்க வீட்டிலே இவளே, 'பக்கத்து வீட்டு அம்மிணி அம்மா ரொம்ப நல்ல மாதிரி. தங்கமான மனசு'-ன்னு எனக்குச் சொல்றப்ப நான் மலைச்சுப் போய் நின்னேன். 'அந்தப் பொம்பளை ஒருமாதிரி! ஜாக்கிரதை, பழக்கம் வச்சுக்காதே’ன்னு நாம சொல்லி எச்சரிக்க வேண்டியிருக்கு. இந்தப் பக்கத்து வீட்டிலே வேதங்களையும் உபநிஷதங்களையும் கரைச்சுக் குடிச்ச ஒரு பாகவதர் குடி வந்திருக்கிறர். நான் ஜாடைமாடையாகச் சொல்லியும் கேளாமே அவர் வெள்ளிக்கிழமை தவறாமே இந்த அம்மிணி அம்மா வீட்டிலே போய் நாராயணியம் சொல்றாரு."--

"அது யாராப்பா அந்தப் புண்ணியாத்மா? பேரைச் சொல்லேன்?’’___

"ஊரெல்லாம் தெரிஞ்ச ஆள்தான்! இஞ்சிக்குடி நாகசாமி பாகவதர்ம்பாங்க."__

"அடேடே! அடிக்கடிக் கேள்விப்பட்ட பேரா இருக்கே? வயசானாலும் செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கா அம்மிணி. போதாக் குறைக்கு வீடு நிறைய வாளிப்பான இளம் பெண்கள். பாகவதர் சுவாமிகள் விசுவாமித்திரர் மேனகை கிட்ட மயங்கினாப்ல மயங்கிட்டார் போல இருக்கு..."

"சே! சே! பாகவதரை எனக்கு நல்லாத் தெரியும்! நீ சொல்ற மாதிரியெல்லாம் ஒண்னும் இருக்காது! பண்த்துக்கு ஆசைப்பட்டு வேணாப் போயிருப்பாரு. வேற ஒண்னும் இருக்காது...'

"அபப்டியா? இதோ இந்தப் படத்தைப் பாரு முதல்லே! இதை பார்த்தப்புறமாவது நான் சொல்றது சரியாயிருக்கும்னு ஒத்துப்பே"---என்று கூறியபடியே பையிலிருந்து

மு-2