பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

சுலட்சணா காதலிக்கிறாள்



சடார்னு அப்பிடிச் சொல்லி முடிச்சுடாதே சுகவனம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விலை இருக்கும். அதைத் தெரிஞ்சுக்கிட்டா அந்த விலையைக் குடுத்து அவங்களை வாங்கிடலாம்-'

"சுலட்சணாவுக்கு வேண்டிய விலை ரொம்பப் பெரிசு. அது உங்க ஸன் கிட்ட இல்லேன்னு அவளே முடிவு பண்ணியாச்சு.'

"அதென்னப்பா அப்பிடி அபூர்வமான விலை? நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?"

“தெரிஞ்சுக்கலாம். ஆனா உங்களுக்குப் புரியறது சிரமம். கொஞ்சம் நுணுக்கமான விலை அது. ”

" *உலகத்திலே உள்ள விலைதானே?"

“உள்ளதுதான்! ஆனாக் கனகராஜாலே மட்டுமே குடுக்க முடிஞ்ச விலை. துரதிஷ்டவசமா அவங்கிட்ட அது இல்லை. அவனுக்காக நீங்க தர முடியாதது அது...' ”

“என்னப்பா புதிர் போடறே?"

"புதிர் இல்லே. இது உண்மை. *சிவிக் கரேஜ்’னு ஒரு இங்கிலீஷ் வார்த்தை இருக்கே...?:

ஆமாம் அதுக்கென்ன வந்தது இப்போ"

“அதாவது சமூகத் துணிச்சல்-பொதுக்காரியங்களிலே தைரியம்”

"சரிதான் மேலே சொல்லு."

“அது உள்ள ஓர் ஆம்பியைத்தான் எனக்குப் பிடிக்கும்கிறா அவ....”

“அப்போ எவளாவது விட்டேத்தியாத் தெருவிலே அலையிற காலிப்பயல்தான் கிடைப்பான் அவளுக்கு'”

“"நீங்க கோபமாப் பேசறீங்க! பொறுமையா மெட்றாஸ்லே அவ அப்பாவைப் போய்ப் பார்த்துக் கல்ந்து பேசுங்களேன். அதுலே என்ன தப்பு: