பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

'முள்வேலிகள்


பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்னார் வள்ளுவர் பெருமான். அதாகப் பட்டது அர்த்தம் என்னன்னா, 'மத்தவாளைப் பத்தி வம்பு பேசிக் கோள் சொல்லிண்டு அலையறதைக் காட்டிலும் தற்கொலை பண்ணிக்கிறது கூடச் சிரேஷ்டமான காரியமாயிருக்கும்' கிறார்'--என்று மிகவும் கடுமையாகப் பதில் வந்தது நாகசாமி பாகவதரிடமிருந்து.

பாகவதர் இப்படி முகத்தில் அறைந்த மாதிரிப் பதில் சொல்வாரென்று கண்ணன் எதிர்பார்க்கவில்லை.நண்பனுக்கு அது சுரீரென்று உறைத்துவிட்டது. இருவருமே திரும்பி விட்டனர்.

"பார்த்துக்கிட்டே இரு கண்ணன்! சீக்கிரமே இப்படி எடுத்தெறிஞ்சு பேசினதோட பலனை இந்தப் பாகவதன் அநுபவிப்பான். அப்பவாவது இவனுக்குப் புத்தி வருதா இல்லையான்னு பார்க்கலாம்"--- என்று அடிபட்ட புலியாகக் கறுவிக்கொண்டு போனான் நண்பன். அவனுக்கு அவ்வளவு கோபம் வந்து கண்ணன் பார்த்ததே இல்லை.

4

த்து நாள் கழித்து ஒரு நாள் இரவு உணவின்போது மோருஞ் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாயாக உப்புக்காரம் ஊறிய பச்சைமிளகு ஒரு கொத்து இலையில் விழவே கண்ணன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். -

"இது ஏது?"

"ஏது, எங்கேருந்து வந்தது எல்லாம் தெரிந்ததால்தான் - சாப்பிடுவீர்களா?"