பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

25


"சாப்பிடுவேனா இல்லையா என்பது வேறு விஷயம்! ஆனால் இது எங்கிருந்து கிடைத்தது என்பது இப்போதே தெரிந்தாக வேண்டியது அவசியம்...'

"பச்சை மிளகு ஊறுகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆயுர்வேத முறைப்படி பக்குவமாத் தயாரிச்சிருக்காங்க."

"இந்த சர்டிபிகேட் எல்லாம் எனக்குத் தேவையில்லை. முதலில் நீ என் கேள்விக்குப் பதில் சொல்லு."

அவள் பதில் சொல்லத் தயங்கித் தட்டிக்கழிக்கவே கண்ணனின் சந்தேகம் வலுப்படத் தொடங்கியது. அவன் இலையிலிருந்து கையை உதறிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விருட்டென்று எழுந்திருந்தான். இனியும் அவனிடம் மறைக்க முடியாதென்று அவளுக்குப் பயம் வந்தது. அவள் வழிக்கு வந்தாள். -

"நீங்க கோபிச்சுக்க மாட்டீங்கன்ன நான் உண்மையைச் சொல்றேன்..."

"மிளகு யார் குடுத்தாங்க?"

"கேரளாவிலிருந்து வந்ததுன்னு பக்கத்து வீட்டு அம்மிணி அம்மா குடுத்தாங்க..."

-இதைக் கேட்டதும் அவன் கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பளமாகப் பொரிந்து தள்ளினான். அவன் முகத்தில் கோபத்தின் தகிப்பு அதிகமாகிக் கனன்றது.

"அம்மிணியம்மா குடுக்கறதை எல்லாம் வாங்கிக்கறதுன்னு வந்திட்டா இந்த வீடு சந்தி சிரிச்சு நாறிப்போகும். இதுசம்மந்தமா நான் ஏற்கெனவே உன்னை எச்சரிச்சாச்சு...'

இதைச் சொல்லியபடியே கலத்திலிருந்ததைச் சாப்பிட்டு முடிக்காமலேபாதியில்எழுந்துகைகழுவி விட்டான் கண்ணன்,