பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா,

39

-என்று அந்த உரையாடலே முறித்துக் கொண்டு திடீரென்று திரும்பிச்சென்றுவிட்டார் பாகவதர்.கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது.

கண்ணன் பாடு மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போலாயிற்று. நண்பனோ பாகவதரிடம் எச்சரித்து வை என்று தன்னிடம் வந்து மிரட்டு கிறான். பாகவதரோ 'உன் நண்பனிடம் நான் பயப்பட மாட்டேன் என்று போய்ச் சொல்' என்கிறார், வேடிக்கையாகத்தான் இருந்தது. தான் இருவருக்கும் நடுவே வகையாக மாட்டிக் கொண்டதை அவன் உணர்ந்தான்.

6

ன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளியும் அம்மிணி அம்மாள் வீட்டுப் பூஜையறையில் குருவாயூரப்பன், மூகாம்பிகை படங்களுக்குச் சிறப்பாக அலங்காரம் செய்து தேவி பாகவதம் சொல்லி வந்தார் பாகவதர்.

அன்றும் அதற்காக அவர் வழக்கம் போல அம்மிணி அம்மாளின் வீட்டுக்குப் போனார். அந்த வீட்டில் யாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனல் பழக்கம் காரணமாக நன்றாய்ப் பேசத் தெரியும். மலையாளமும், ஆங்கிலமுமே எழுதப் படிக்கப் பேச வரும்.

உள்ளே மனத்தில் வைத்துக்கொண்டு தவிப்பதைவிடமறைத்து ஒளிப்பதைவிட அந்த மஞ்சள் பத்திரிகை உண்மை விளம்பியில்-வந்திருப்பதை எல்லாம் அந்த வீட்டார் எல்லாருக்கும் சொல்லிவிடுவது என்று பாகவதரே அதை எடுத்துக்கொண்டு போய் இருந்தார், அதையெல்லாம் நேரடியாகச் சொன்னால் அவர்களே மிரண்டு போய் விடுவார்களோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. தேவி பாகவதமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் இங்கே வந்து போவதால் தானே இந்த வம்பு எல்லாம்?