பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

45

அம்மிணி அம்மா உள்ளே நுழைந்தபோது நாட்டியக்காரிகளாகவும், நட்சத்திரங்களாகவும் இருக்கும் அவள் பெண்களின் பெயர்களை முணுமுணுத்து, "இவதான் அதுகளோட அம்மாக்காரி! நம்ம காலனி வாசி! இஞ்சிக்குடி பாகவதரிட்ட சகலமும் அடக்கம்" என்று கூட்டத்தில் இரகசியமாய்க் காதும் காதும் வைத்தாற் போல் முணு முணுத்துப் பேசிக் கொண்டார்கள்.

ஓரிருவர், "யோவ்! இவதான்யா ஸெக்ஸ் பாம் நந்தினி யோட மதர்! நல்லாப் பார்த்துக் கோ-"என்று கூடச் சொல்லிச் சிரித்தனர். அப்படிச் சிரித்தவர்களுக்கு அதில் ஒரு நமட்டு மகிழ்ச்சி.

காலனி நலம் நாடுவோர் சங்கத்தின் தலைவரான சுந்தரவரதனையே-ரிட்டயர்டு போஸ்டு மாஸ்டரையே-- கூட்டத்துக்குத் தலைமைதாங்கி நடத்திக்கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று செயலாளர் கண்ணன் நினைத்திருந்தான்.

அந்தக் காலனி எல்லையில் ஒரு சிறிய பிள்ளையார் கோயில் கட்ட ஏற்பாடு செய்யவே அந்தப் பேரவை கூட்டப் பட்டிருந்தது. பிள்ளையார் கோயில் என்பதால் கூடியிருந்தவர்களில் சிலர் கண்ணனைக் கலந்து பேசி யோசிக்காமலே திடீரென்று பாகவதரை அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்குமாறு முன்மொழிந்து விட்டனர். உடனே கூட்டமும் அதைப் பேராரவாரத்துடன் கைதட்டி வரவேற்று விட்டது. பாகவதர்தான் ஊரறிந்த பிரமுகராயிற்றே.

கண்ணனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி, நிலமை அவன் கையை மீறிப் போயிருந்தது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. காலனி அஸோஸியேஷன் தலைவரே இந்தக் கூட்டத்தையும் தலைமை வகித்து நடத்தட்டும் என்று எண்ணியிருந்தான் கண்ணன். அதில் இப்போது மண்