பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

53



8

ருநாள் காலை-ஐயப்பன் நகர் மேற்கு முதல் குறுக்குத் தெரு ஒன்பது, பத்து, பதினொன்று எண்ணுள்ள வீடுகளுக்கு இடையே பயரங்கரமான கூப்பாட்டுடன் தெருச் சண்டை ஒன்று நடந்தது. ஊரே தெருவில் கூடிவிட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. எல்லாரும் வீட்டில் தான் இருந்தனர். பத்துமணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு மரக் கிளைகளும் மின்சார வயரும் உரசுகிற இடங்களாகப் பார்த்து மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு வந்தனர் மின்சார வாரிய ஆட்கள். மின்வாரிய லாரி கண்ணன் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. . .

அந்தக் காலனி முழுவதும் அண்டர்கிரவுண்ட் கேபிள் இல்லாத காரணத்தால் சர்ஃபேஸ் லயனில் இடிக்கும் மரக் கிளைகள், தென்னை ஓலைகளை வெட்டிவிட்டுச் சரி செய்வதற்காக லயனை ஆஃப் செய்துவிட்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி மின்சார வாரிய ஆட்கள் வந்து போவார்கள். மரஞ்செடி கொடிகள் தாராளமாகத் துவம்சம் ஆகும்.

இப்படி ஒவ்வொரு முறையும் காலனியின் பசுமையைச் சவரம் பண்ணும் இந்தப் பணி சவிஸ்தாரமாக நடைபெறும். காலனி வாசிகளுக்குச் சில மணிநேரம் மின்சாரம் இல்லாமல் போவதோடு மரம் செடி கொடிகளுக்கும் கடுமையான சேதம் ஏற்படும். காலனியின் பசுமை கணிசமாகப் பறிபோகும்.

கண்ணன் வீட்டு வாசலில் இருந்த ஒரு மின்சாரக் கம்பத்திலிருந்துதான் பாகவதர் வீட்டுக்கும் சரி, அம்மிணி அம்மாள் வீட்டுக்கும் சரி, இருவருக்குமே ஓவர்ஹெட் வயர் மூலம் கனெக்க்ஷன் போயிற்று. அதே கம்பத்திலிருந்து கண்ணன் வீட்டுக்கும் நடுவாக ஓவர்ஹெட் வயர் இழுக்கப் பட்டிருந்தது.

மு---4