பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

முள்வேலிகள்

"வலையிடைப் பட்ட மானென அலையிடைப்பட்ட துரும்பென-மலையிடைப்பட்ட மீனென நீங்கள் நடுவே சிக்கித் தவிப்பதும் எனக்குத் தெரியும்"-என்று தன் பாணியில் வர்ணித்தபடியே நன் கொடை தருவோர் பட்டியல் என்ற ஒரு வசூல் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கண்ணனிடம் நீட்டினார் புலவர்.

கண்ணன் உள்ளூர எரிச்சலும் வெளியே ஒப்புக்கு முகமலர்ச்சியுமாக வக்கீலிடம் அழுதது போகக் கைச் செலவுக்கு மிச்சமிருக்கட்டும் எனப் பர்ஸில் ஒதுக்கி வைத்திருந்த ஒரு பத்து ரூபாயை எடுத்துப் புலவரிடம் கொடுத்து விட்டு நோட்டில் தன் பெயரை எழுதிக் கையெழுத்துப் போட்டுத் திருப்பிக் கொடுத்தான். புலவர் எழுந்து போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு.

"உங்க ஒப்புதல் கிடைக்கும்கிற நம்பிக்கையிலே இதில் ஒரு சிறு திருத்தம் செய்துக்க அநுமதியளிக்கணும் நீங்க! முதல் முதல்லே கையெழுத்துப் போட்டு நன்கொடையைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். நீங்களே பத்து வெண் பொற் காசுகள்தான் தந்திருக்கிறீர்கள் என்று பார்த்ததும் இதற்குக் கீழே கையொப்பமிடுகிறவர்கள் ஐந்து, இரண்டு என்று தொகையைப் படிப்படியாய்க் குறைத்து விடுவார்கள். ஆகவே நீங்க எழுதியிருக்கிற 10க்குப் பக்கத்திலே ஒரு ஒண்ணு மட்டும் போட்டு நூத்தி ஒண்ணுன்னு திருத்திக்கறேன் அதனாலே உங்களுக்குச் செலவு ஒண்ணுமில்லே. எனக்கு வரவு உண்டு."

"ஒ எஸ்! தாராளமாப் பண்ணிக்குங்க புலவரே! நமக்குள்ளே இதெல்லாம் சொல்லிட்டுத்தானா செய்யணும்? என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி உரிமையை நீங்க தாராளமா எடுத்துக்கலாம்."

புலவர் தொகையைத் திருத்திக்கொண்டு விடைபெற்றார் உண்மை விளம்பி நண்பன், புலவர் மகிழ்மாறன் இவர்களால் தனக்கு ஒரு பயனும் இல்லாவிட்டாலும் மற்றவர்களை