பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

முள்வேலிகள்

வந்தாத்தானே பேச நல்லா இருக்கும்?"--என்று கண்ணனுக்குப் புலவரிடமிருந்து பதில் வந்தது.

நீலகண்டனுக்கும் கண்ணனுக்கும் பகைமை எதுவும் இல்லை என்றாலும், தான் நீக்கப்பட்ட ஒரு பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார் என்ற ஒரே காரணத்தாலேயே அவர் வெறுக்கப்பட வேண்டியவர் என்பது போல் தோன்றி விட்டது.

அந்தக் காலனி அஸோஸியேஷன் சம்பந்தமான பழைய ரசீதுப் புத்தகங்களின் அடிக்கட்டை வேண்டுமென்று நீலகண்டனே ஒரு நாள் கண்ணணைத் தேடிக் கொண்டு வந்தார்.

"எப்போதும் போல உங்க ஒத்துழைப்பெல்லாம் வேணும்! இப்ப நீங்க செகரெட்டிரியா இல்லைன்னாலும் நீங்க தான் இந்த அஸோஸியேஷனோட ஃபவுண்டர் செக்ரெட்டரி, மறந்துடாதீங்க... ஏதோ போறாத வேளை என்னென்னவோ நடந்து போச்சு. அதையெல்லாம் நீங்களும் மறந்துடுங்க. நாங்களும் மறந்துடறோம்" --என்று அவர் கூறிய பரிவான வார்த்தைகளுக்குப் பதில் இதமாக நாலு சொற்கள் கூறக் கூடக் கண்ணால் முடியவில்லை.

"ரசீது அடிக்கட்டை கிடிக்கட்டைல்லாம் எதுவும் எங்கிட்டக் கெடையாது. உங்க அஸோஸியேஷனோட சங்காத்தமே நம்பளுக்கு வேண்டாம். ஆளை விடுங்க சாமீ!" --முகத்திலடித்தாற்போல நீலகண்டனுக்குப் பதில் சொன்னான் கண்ணன். அதன்பின் நீலகண்டன் கண்ணனைத் தேடி வரவே இல்லை.

ஆனால் காலனி நலன் நாடுவோர் சங்கம் பிரமாத வேகத்தில் செயலாற்றியது. அந்தக் காலனியில் வசிக்கும் ஐந்து முதல் பன்னிரண்டு வரையிலான வயதுள்ள குழந்தைகளுக்காக வெல்ஃபேர் அஸோஸியேஷனே காலனிக்குள் இம் கேட்டு வாங்கி ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளைப் போட்டு