பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

முள்வேலிகள்

"நம்ம அ. அ. க. சார்பிலே ஒரு ரெக்ரியேஷன் கிளப். அதாவது மனமகிழ் மன்றம் தொடங்கி, சீட்டு, கேரம் போர்டு, செஸ்,டென்னிஸ்,ஷட்டில்காக் மாதிரி விளையாட்டுங்களுக்கு ஏற்பாடு பண்ணிக் குடுத்தோம்னு அங்கத்தினர்கள் அலறிக்கிட்டு ஓடிவருவாங்க..."

"அதென்ன அ. அ. க...?"

"அதாங்க அய்யப்பன் நகர் அன்பர் கழகம்கிறத்துக்குச் சுருக்கம்."

"முழுப் பேரையுமே சொன்னாக் கூட யாருக்கும் தெரியாததைச் சுருக்கமாகச் சொல்லி என்ன ஆகப்போகுது? ஏதோ உமக்குக் கட்சிப் பெயருங்களைச் சொல்றமாதிரிச் சுருக்கிச் சொல்லிப் பார்க்கணும்னு ஆசை. சொல்லிக்குமே?"

"என் யோசனை எப்பிடி?"

"யோசனை எல்லாம் சரிதான்! சீட்டுக்கட்டு, கேரம் போர்டு, ஷட்டில்காக் எல்லாம் வாங்கப் பணத்துக்கு எங்கே போவீர்? சொல்லும்! அதுக்கெல்லாம் முதல்லே பணம் வேணுமே, பணம்?"

"ஒரு நிதி வசூல் தொடங்கவேண்டியதுதாங்க."

"ஐயையோ! வேண்டவே வேண்டாம்! உங்களாலே முடியும்னா 'இந்த மாதிரி எல்லாம் செய்யப் போறோம்! மெம்பராச் சேருங்க,'ன்னு முதல்லே நெறைய ஆட்களைச் சேருங்க அப்பிடி நெறையப் பேர் சேர்ந்தாங்கன்னா அப்புறம் 'ரெக்ரியேஷன் கிளப், செட் அப் பண்ணிடலாம்."

"அது அலை ஒய்ந்த பிறகு நீராடலாம்னு காத்துக்கிடக்கிற மாதிரி ஆயிடுங்க! முதல்லே எல்லாம் செய்துதான் அப்புறம் ஆள் சேர்க்க முடியும்."

"சரிதான்! ஆனால் தண்ணீரே இல்லாம நீராட முடியாதே? தண்ணீரைத் தேக்கிட்டுத்தானே அப்புறம் குளிக்கலாம்?"