பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

81

"சே! சே! நான் அத்தனை தூரம் நன்றி மறக்கிற ஆள் இல்லீங்க. நாளைக்கே 'அ. அ. க. வின் தன்னேரிலாத் தலைவர் கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறியல் திட்டம் கைவிடப்பட்டது'ன்னு இன்னொரு போஸ்டர் போட்டு உங்களை எல்லாரும் கொண்டாடற மாதிரிப் பண்ணிடுவேன். பயப்படாதீங்க."

கண்ணன் திகைத்தான். மகத்தான அரசியல் கட்சி ஒன்றை நடத்தும் அத்தனை பெரிய சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு புலவர் ஒரு சின்னக் காலனி அமைப்பில் சிக்கித் திணறுவதாகக் கற்பனை செய்து கொண்டான் அவன். இவ்வளவு பெரிய திறமைசாலியைச் செயலாளராகக் கொண்ட ஒரு சங்கத்தின் தலைவராக இருக்கும் திறமை தனக்குத்தான் இல்லையோ என்று ஏக்கமாயிருந்தது அவனுக்கு.

இந்த நாட்டில் தலைவனாக விரும்புகிற ஒவ்வொருவனுக்கும் இவரை மாதிரி ஒரு செயலாளர் கிடைத்தால்தான் அதிர்ஷ்டம் என்று தோன்றியது கண்ணனுக்கு. அந்த வகையில் அ. அ. க. தலைவராகிய தான் அதிர்ஷ்டசாலியா இல்லையா என்பதுதான் இன்னும் அவனுக்குப் புரியவில்லை. சந்தேகமாகவே இருந்தது.

அய்யப்பன் நகர் காலணி வெல்ஃபேர் அஸோஸியேஷனிலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு வருஷத்திற்கு மேலாகியும் அதற்குப் போட்டியாகப் புலவர் மகிழ்மாறன் தொடங்கிய் அ. அ. க. வில் இரண்டே இரண்டு உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. அந்த இரண்டு பேர் கூட வேறு யாருமில்லை. புலவரும் கண்ணனும்தான்.

பழைய சங்கத்திலோ ஜெட் வேக வளர்ச்சி. பள்ளிக் கூடம், கோயில், பார்க், புதிய சாலைகள், தெருக்களுக்கு மெர்குரி விளக்குகள், காலனி முழுவதும் அண்டர் கிரவுண்ட் கேபிள் என்று பலவற்றைச் சாதித்து முடித்திருந்தார்கள். உண்மை விளம்பி நண்பன் பாகவதரையும் அம்மிணி