பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

யில் இருந்து விலகி, ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு, கிழைக் கடற்கரையில் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் பெற்றார். அந்த மகானைத்தான் இன்று மக்கள் மரியாதையுடன் “ராவுத்தர்சாகிப்” என அழைத்து வருகின்றனர்.

மன்னார்வளைகுடாவில் முத்துக்குளிக்கும் உரிமை நெடுங்காலமாக மதுரை நாயக்க மன்னருக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் இருந்து வந்தது. ஆனால், காயல்பட்டினம் பிள்ளைமரக்காயருக்கு தமது உரிமையினின்றும் பத்து கல்விட்டுக் கொடுத்தார். திருமலை மன்னர்.[1] மரக்காயரிடம் கொண்டிருந்த தனியான மதிப்பிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இன்னும் ஒரு சிறப்பான செய்கை, தமிழக இசுலாமிய வீரர்களை தமது நம்பிக்கைக்குரிய அந்தரங்க மெய்க்காப்பாளராக அவர் அமர்த்தி வைத்து இருந்தது.[2] மதுரைக் கோட்டையில் வாயில் பாதுகாப்பிற்கு, அவரது ஆட்சியில் இருந்த எழுபத்து இரண்டு பாளையக்காரர்களை நியமித்து இருந்தார். அவர்கள் பெரும்பாலும் “மணவாடுகள்” — நாயக்கர்களும்கம் கம்பளத்தார்களும். ஆனால் அவரது மாளிகையில் காவலுக்கும் சொந்த உடமைகள், உயிருக்கும் பொறுப்பாக இருந்தவர்கள் இசுலாமியர்.[3] இசுலாமியரிடம் இமயமலைபோன்ற இணையற்ற நம்பிக்கை வைத்து இருந்தார் மதுரை மன்னர். அவரை அடுத்து நாயக்க மன்னராகப் பட்டமேறிய சொக்கநாத நாயக்கர், மதுரையிலிருந்து தமது தலைநகரை திருச்சிராப்பள்ளி கோட்டைக்கு மாற்றியவுடன், அந்தக் கோட்டையின் முழுப்பொறுப்பையும் ருஸ்தம்கான் என்ற இசுலாமியரிடம் தான் கொடுத்து இருந்தார்.[4]

மேலும் அறக்கொடைகளையும் இசுலாமிய நிறுவனங்களுக்கு நாயக்க மன்னர்கள் வழங்கியுள்ள விபரமும் தெரியவருகிறது. தளவாய் கம்பணன் என்ற நாயக்க ஆளுநர். கி.பி.1624ல் நெல்லை மாவட்ட பனங்குடியில் உள்ள புத்த மியான் பள்ளி வாசலுக்கு பனங்குடி கிராமம் முழுவதையும் முற்நுாட்டாக  Invalid template invocation→


  1. Arunachalam S. – History of Pearl Fishery in Tamil coast (1952) p. 115
  2. Vincent kronin — Pearl to India (1959) (New York) p. 122
  3. அப்துற்றகீம் – எம்.ஆர்.எம்—தொண்டிமாநகர் (1959) பக்.12
  4. Old Historical Manuscripts - vol II p. 35