பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டம் பரிவும் பாசமும் கொண்டிருந்தனர் என்பதை சேதுபதி மன்னர்களது பட்டயங்கள் சான்று பகருகின்றன. தமிழ்ப் பணிகளுக் கும் தெய்வீக கைங்கர்யங்களுக்கும் தம்மை, அர்ப்பணித்துக் கொண்டு இருந்த திருமலை ரகுநாத சேதுபதி (கி.பி.1636-1674) குணங்குடியில் அடக்கப்பெற்றுள்ள புனிதசையதுமுகம்மது புகாரி என்ற இறைநேசரது தர்கா பராமரிப்பிற்காக, நிலக்கொடை கள் அளித்தார்.[1] இந்த மன்னரை அடுத்து அரியணை ஏறிய ரகுநாத கிழவன் சேதுபதி (கி பி.1674-1710) மீண்டும் சில நிலக்கொடைகளை அந்த தர்காவிற்கு வழங்கியதுடன் திருச்சுழியல், காரேந்தல், கொக்குளம், நாடாகுளம் பள்ளிவாசல்களுக்கும் நிலக்கொடை வழங்கிய விவரம் இராமநாதபுரம் சமஸ்த்தானம் ஆவணம் ஒன்றில் காணப்படுகிறது. மற்றும் சேதுபதி மன்னர்கள், திருச்சுழியில், காரேந்தல், கொக்குளம், நாடாகுளம், பொந்தாம்புளி, கொக்காடி, கன்ன்ராஜபுரம், நாரணமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், இராமேசுவரம், இராமநாதபுரம், எறுபதி தொண்டி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் வழங்கியுள்ள அறக்கொடைகள், அந்த மன்னர்களது சமரச மனப்பான்மைக்கு சாட்சியமாக, இன்றளவும் இருந்து வருகிறது.[2]

இராமநாதபுரத்தை முதன் முதலில் கோநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி ரகுநாத கிழவன் சேதுபதி, கொடையால் தமிழ் வளர்த்த கோமான் வள்ளல் சீதக்காதி மரக்காயரை, ஆள்வினையுடைய அமைச்சராக தமது அவையில் அமரச் செய்து இருந்தார். இராமநாதபுரம் கோட்டைக்குள், மன்னரது மாளிகைக்கு அருகில் அழகிய மாளிகையொன்றையும் மரக்காயருக்கு அளித்து இருந்தார் என்ற விபரம் சீதக்காதி நொண்டி நாடகத்தில் காணப்படுகிறது. "யாதினினும் இனிய நண்ப! எம்முடன்


  1. இராமநாதபுரம் சமஸ்தானம் நிலமாண்யமணக்கு.
  2. இராமநாதபுரம் சமஸ்தானம் நிலமான்ய கணக்கு மற்றும் இராமேசுவரம் ஆபில் காபில் தர்கா செப்பேடு, ஏறுபதி செய்யது இபுறாஹிம் (வலி) தர்கா, செப்பேடு இராமநாதபுரம் ஈசாசாயபு தர்கா செப்பேடு.