பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

யாண்டும் இருத்தி" என வள்ளலை மன்னர் தம்முடன் வைத்துக் கொண்டதுடன், தமது இளவல்களில் அன்பால் சிறந்தவர் என்ற பொருளில் "விசைய ரகுநாத பெரியதம்பி" என்ற விருதும் வழங்கிச் சிறப்பித்தார். மாறவர்மன் குலசேகர பாண்டியனது அமைச்சராக இருந்த சுல்தான் தக்கியுத்தீனுக்குக் கூட கிடைக்காத பேறு. கோட்டை சொத்தளம், அரண் , அமைப்புகளில் இசுலாமியர் சிறந்து இருந்தவர்கள். ஆதலால், சேதுபதி மன்னரும் அதுவரை, மண்ணாலாகிய கோட்டை மதிலுடன் விளங்கிய தமது இராமநாதபுரம் கோட்டையை அகற்றிவிட்டு, வள்ளல் அவர்களது ஆலோசனையைக் கொண்டும் பொருள் வளத்தைக் கொண்டும் முப்பத்து இரண்டு கொத்தளங்களுடன் இருபத்து ஒரு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான கற்கோட்டையையும் முகலாய மன்னர்களது பணியில் அரண்மனையையும் அமைத்தார்.[1]இராமநாதபுரம் அரண்மனை அமைப்பிலும், அரண்மனை நிர்வாகத்திலும் சேதுபதி மன்னரது அரசியல் நடைமுறையிலும் வள்ளல் சீதக்காதிக்கு பெரும்பங்கு இருந்தது. அத்துடன் மறவர் சமையின் கடற்கரைப் பகுதி வணிகத்தை கண்காணிப்பதற்கும், கடற்கரைப்பகுதியில் மன்னரது இறையை வசூலிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் டச்சு ஆவணங்களில் சீதக்காதி மரக்காயர் "ரிஜண்ட் பெரியதம்பி" என்று குறிக்கப்பட்டுள்ளார்.

இந்த "விஜய ரகுநாத" என்ற சேதுபதிகளது விருது, முதன்முறையாக இசுலாமியரில் வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு வழங்கப்பட்டு இருந்த பொழுதிலும், பிற்காலத்திலும் கிழக்கரையைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட மரைக்காயர் குடும்பத்தினருக்கு மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டு அவர்கள் அதனை ஆவணங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.[2] இதனைப் போல அபிராமத்தை (கமுதி வட்டம்) சேர்ந்த சிறந்த இஸ்லாமிய பெரு


  1. Rajaram Rao. T. Manual of Ramnad Samasthanam (1898 (р.232
  2. அமீர்அலி. என்.ஏ.-வள்ளல் சீதக்காதி வாழ்வும் காலமும்.(1982) பக் : 194