பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

வணிகப் பிரதிநிதியான மைக்கேல் என்பவர் கி.பி. 1794ல் அனுப்பிய ரகசிய அறிக்கையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள கீழ்க்கண்ட ஊர்களின் கைத்தறி மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[1]

1. சித்தார்கோட்டை கிராமம் 30 தறிகள்
2. பன்னைக்குளம்  " 20 தறிகள்
3. எக்ககுடி  " 50 தறிகள்
4. போகலூர்  " 50 தறிகள்
5. ஆனையூர் பேரையூர்  " 50 தறிகள்
6. கமுதி  " 100 தறிகள்
7. திருப்பாலைக்குடி  " 20 தறிகள்
8. நம்புதாழை  " 20 தறிகள்
9. எடுத்துக்காட்டு  " 20 தறிகள்
10. எடுத்துக்காட்டு  " 20 தறிகள்
11. எடுத்துக்காட்டு  " 60 தறிகள்
12. எடுத்துக்காட்டு  " 30 தறிகள்
13. எடுத்துக்காட்டு  " 150 தறிகள்
மொத்தம் 980 தறிகள்

இவையனைத்தும் இசுலாமியரது தறிகள் கும்பெனியாரது இன்னொரு ஆவணத்தின்படி, பரமக்குடியில் மட்டும் கி.பி.1790ல் அறுநூறு தறிகள் இருந்ததாகவும் அதில் அறுபது சோனகருடையவை என குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இந்த தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிவகைகளை டச்சுக்காரர்கள் விரும்பி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தனர் எனவும் தெரியவருகிறது.[2] இந்த துணிவகைளில் "முறி” என்ற வகை இருந்ததும் தெரிய வருகிறது. இசுலாமியரைக் குறிக்க உதவும் "மூர்" என்ற சொல்லின் ஆதாரமாகக் கொண்டது இந்த துணியின் பெயராகும். இந்த இசுலாமிய நெசவாளிகள் பற்றிய இராமநாதபுரம் மன்னரது கி.பி. 1742ம் வருடத்திய செப்புப் பட்டயத் தொடரில் உள்ள "நமது காவல் குடியினரான துலுக்கரது "தறிக்கடமை" நீக்கி" என்ற சொற்கள் இஸ்லாமியர் பால் சேதுபதிகள் கொண்டிருந்த


  1. Tamilnadu Archives-Public Consultations Vol. 184. A, 12. 2. 1 793-PP. 862-65
  2. Tamilnadu Public Consultations