பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

முனை, ஸெனகல் ஆறு, கினியா (கி பி. 1445) வெர்டோ முனை (கி.பி. 1446) ஆகிய புதிய நீர், நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய ஊக்குவிப்புகளின் தொடராக, வாஸ்கோடா காமா என்ற மாலுமி கி.பி. 1497ல் ஆப்பிரிக்க பெருங்கண்டத்தின் மேற்கு, தெற்குப்பகுதிகளைக் கடந்து இந்து மகா கடல் வழியாக கி.பி. 1498ல் நமது நாடடின் மேற்கு கரைப்பட்டினமான கோழிக்கோட்டை வந்தடைந்தார். போர்ச்சுகல் நாட்டு மன்னரது பரிந்துரை மடலுடன்.

கோழிக்கோடு மன்னர் ஸாமரின், போர்ச்சுகல் மாலுமி குழுவினருக்கு வரவேற்பு வழங்கி ஆதரவு அளித்தார். என்றாலும் அந்த மன்னரது நண்பர்களாக, அலுவலர்களாக, குடிகளா, ஏற்கனவே அங்கு இருந்து வந்த இசுலாமியரது செல்வாக்கும், செல்வ வளமும் பரங்கிகளது கண்களை உறுத்தின. வாஸ்கோடா காமாவைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் இருந்து கொங்கணக்கரை

கேரளக்கரைக்கு வந்த வாணிப கப்பல்களில் விற்பனைப் பொருட்களுடன் பீரங்கிகளும் இருந்தன. ஆங்காங்கு இசுலாமியரது வாணிபக்கப்பல்களை கொள்ளையடிப்பதற்கு அவை உதவின. அத்துடன் ஸாமரின் மன்னரை அடக்கி, அஞ்சுமாறு செய்யவும் அவை பயன் பட்டன.[1] நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கிழக்கு கரையையும் எட்டிப்பார்த்தனர். கி.பி. 1502ல் அவர்கள் தூத்துக் குடிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பிரமிக்க வைத்தது. தமிழகத்திலும் இசுலாமியர், தூத்துக்குடி துறைமுகத்தை மட்டுமின்றி மன்னார் வளைகுடா பகுதி முழுவதையும் அவர்களது கட்டுபாட்டில் வைத்து இருந்தனர். அப்பொழுது காயலில் இருந்த இசுலாமிய அரசர் முத்துக்களாலான மாலையை அணிந்து காணப்பட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு இருந்த பரவர்கள், இசுலாமியரது இறுக்கமான பிடியில் இருந்து வந்தனர். அன்றைய நிலையில் முத்துகுளித்தல் பெரிதும் ஆதாயம் அளிக்கும் தொழிலாக இருந்தது. ஆனால், பரவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அந்த


  1. Arunachalam - History of Pearl fisheries of Tamil Coast. (1952) p.p. 17.18