பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

திற்கு கொண்டு செல்லப்பட்டு, கடல்வழி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக சீனப்பயணியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1] கீழக்கரையில் இருந்த இத்தகைய முத்துப்பேட்டை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முத்துக்களின் விற்பனையில் நூற்றுக்கு அரைப்பணம் மகமையாக அந்த ஊர் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு வழங்க அங்கு நாலுப்பட்டனத்து பதினென் விஷயத்தார்" (வணிகக்குழு) உடன்பாடு கண்டதாக அங்குள்ள கி பி. 1531ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.[2]

மற்றும் இசுலாமியப் பெண்டிர், முத்துக்களைக் கொண்ட பொன்னாலான வடங்கள், மாலைகள், தொங்கட்டான், நெற்றிச்சூடி, பாடகம், தோள்வளை, பீலி , மோதிரங்கள் ஆகிய அணிகளை அணிந்து வந்தனர். இசுலாமிய ஆடவர்களும் தங்களது இயற்பெயர்களுடன் “முத்தை"யும் இணைத்து வழங்கும் வழக்கமும் ஏற்பட்டது. முத்து இபுராகீம், முத்துமுகம்மது, முத்துநயினார், முத்து ஹூசேன், என்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகளாகும். இன்னும் நன்கு விளைந்த ஆனி முத்துக்களைப் போன்று, வயதிலும், வாழ்விலும் முதிர்ந்த பாட்டன்மார்களை" இசுலாமியர். "முத்து வாப்ப"' எனச் செல்லமாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேலும் தங்களது காணிகளுக்கு "முத்து வயல்" என்றும், குடியிருப்பு ஊர்களுக்கு முத்துப்பட்டனம் என்னும் இவ்வல்லங்களுக்கு "முத்துமகால்’’ என்றும் பெயர் சூட்டினர். இவைகளில் இருந்து தென்பாண்டிக்கடல் முத்துக்கள், தமிழக இசுலாமியரது வாழ்வில் பதினாறு, பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுச் செய்திகள் உதவுகின்றன. இதற்கிடையில் போர்ச்சுகல் நாட்டு கடல் கொள்ளைக்காரனாக தல்மேதா மாலத்திவில் தங்கரமிடடு நின்ற இசுலாமியரது வணிக கப்பல்களை கொள்ளையிட லூர்சி என்பவனை அனுப்பி வைத்தான் திரும்பும் வழியில் அவனது கப்பல் திசைமாறி இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியையும் பின்னர் கொழும்புனையும்


  1. Appadorai Dr. Economic Conditions of S. India(1OOOAD-15OOAD)
  2. A.R. 396/1907.