பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அடைந்தது.[1] இசுலாமியர். அங்கும் அரசியல் செல்வாக்குடன் வளமார்த்த நிலையில் இருந்ததை அவன் கண்டான் அப்பொழுது அங்கு நிலவிய அரசியல் குழப்பங்களில் தலையிட்டு, அவைகளை அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை வலுவிழக்குமாறு செய்தான். அவனைத் தொடர்ந்து பல போர்ச்சுகல் கப்பல்கள் போர் வீரர்களுடன் கொழும்பு வந்தன. இத்தகைய பின்னணியில், தளபதி ஜோ புரோலன் தலைமையில் (கி.பி.1523) கப்பல் அணி காயல் துறையை அடைந்தது. அவர்களது ஆதிக்கத்தை கிழக்கு கடற்கரையில் நிறுவ பரங்கிகள் மேற்கொண்ட திட்ட வட்டமான முயற்சியை இந்தக் கப்பல் அணி வருகை உணர்த்தியது. காலம் காலமாக இசுலாமியர்களது கட்டுப்பாட்டில் இருந்த பரவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் போர்ச்சுக்கல் பரங்கிகள் ஈடுபட்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இசுலாமியரது, எடுபிடியாக, அவர்களையே நம்பி வாழ்ந்தவர்களின் இதயங்களில் வெறுப்பைக் கொட்டிக்கிளறினர். அப்பொழுது அங்கு நடைபெற்ற முத்துச்சலாபத்தின் பொழுது ஒரு முஸ்லீமிற்கும் பரவ இனத்தொழிலாளிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பெரிதுபடுத்தப்பட்டு பெரிய இனக்கலவரமாக உருவெடுக்க உதவினர். எவ்வித ஆயத்தமும் இல்லாத இசுலாமியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பலர் கொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தூத்துக்குடியில் கி.பி 1532ல் நடைபெற்றது. ஆத்திரமடைந்த இசுலாமியர், பரவர்களைப் பழி வாங்கினர். கடலிலும், நிலத்திலும் கொலைக்கு கொலை, கொள்ளை தொடர்ந்தது. அவர்களது குடிசைகள் கொடூரமான முறையில் திக்கிரையாயின. பரவர் படகுகளையும் உடமைகளையும் போட்டுவிட்டு உயிர்தப்பி ஓடினர்.[2]

மீண்டும் இசுலாமியர் அவர்களைத் தாக்கினால் .... ... ... இந்த பயத்திற்கு பரிகாரம் செய்வதாக போர்ச்சுக்கீசியர் அவர்களுக்கு சொல்லினர்: பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் ஒருநிபந்தனை, அவர்கள் அனைவரும் கிறித்துவமதத்தை


  1. Fr. Pereira. History of Ceylon p. p. 10-11
  2. Krishnasamy - Dr. A. - Tamil Country under Vijaya Nagas(1964) P-P. 235 - 236