பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கிழக்காசிய வாணிபத்தில் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியருக்கு போட்டியாக வந்ததுடன் இலங்கையில், அவர்களது அரசியல் ஆதிக்கம், ஏகபோக வாணிபம்-ஆகிய நிலைகளை அழித்தனர்.

டச்சுக்காரர்கள் மதுரை நாயக்க மன்னர்களுடனும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுடனும் நட்பு நிலையில் மன்னார்வளைகுடா முத்துக்குளித்தளிலும் உள்நாட்டில் தானிய வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி துறைமுகம் அவர்களது பிடியில் இருந்தாலும் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னரிடம் கிரையத்திற்கு வாங்கிய இடத்தில் கோட்டையும் பண்டகசாலையும் அமைத்து, இலங்கை, சுமத்திரா (தற்பொழுதைய இந்தோனிஷியா) ஆகிய நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் வைத்து இருந்தனர். இவர்கள் உலாந்தாக்காரர் என அழைக்கப்பட்டனர். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் கைத்தறித் துணிகளை வாங்கி மேனாட்டிற்கு ஏற்றி அனுப்பும் பணியில், ஆங்காங்கு இருந்த மரக்காயர்கள் அவர்களுக்கு உதவி வந்தனர் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஆனால் இந்த கால கட்டத்தில் தமிழக இசுலாமியரைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் வரலாற்றில் காணப்படவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு பதினைத்து ஆண்டுகள் கழித்து போர்ச்சுகீஸீய கடல் நாய்களை அழிப்பதற்கு இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை கோழிக்கோட்டு ஸாமரின் மன்னருடன் விஜயநகரப் பேரரசரது உறவினரும் ஆளுநருமான வித்தலாவும் அந்த முயற்சியில் இணைந்து கொண்டார். முத்துக்குளித்தலில் போர்ச்சுகீஸியர் விஜயநகர பேரரசரது பங்கினை அளிக்கத் தவறியது. தெற்கு கடற்கரையில் உள்ள மணப்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி,வேம்பாறு ஆகிய ஊர்களில் அவர்களது நிலையினை பலப்படுத்திக்கொண்டது. கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரையிலான கடற்பகுதியில் வாழும் பரவர்களும் அவர்களது நாட்டு அரசியல் சட்டதிட்டங்களை அமுல் நடத்தி வந்தது.[1] இராமேசுவரம் செல்லும் பயணிகளிடம் வேதாளையில் கட்டாயமாகத் தலைவரி


  1. Sathianathaiar—History of Madura Nayaks (1924)(appendix)