பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

குடாக்கடல், அராபியக் கடல் வழியாக கடற்கரைப் பகுதிகளில் கரையை ஒட்டியவாறு இந்தியாவுக்கு சென்றன. இவ்விதம் செல்வதில் கப்பல்கள் பாறைகளில் மோதுதல், கடற்கொள்ளைக்கு இலக்காகுதல் போன்ற ஆபத்துக்கள் மலிந்து இருந்தன. ஆனால் உறிப்பாலளின் புதிய வழி, ஆழ்கடலைப் பருவ காலங்களில் நேராகக் கடந்து செல்லு முறையாகும். அராபிய தீபகற்ப முனையான ஸியாகரஸ் என்ற இடத்திலிருந்து தமிழகத்தின் மேற்குக் கரையை அடைய அப்பொழுது நாற்பது நாட்களே ஆயின. பயணம் செய்ய வேண்டிய மொத்த துாரம் 1355 மைல்களாகக் குறைந்தது. காலமும் தொலைவும் குறைந்ததுடன், வாணிபக் குழுவினருக்கு கரையோரப் பகுதிகளில் உள்ள கடற்கொள்ளையரினின்றும் விடுதலையும் கிட்டியது. முன்னர், இந்தியாவின் மேற்கு கரைக்கு ஆண்டு ஒன்றிற்கு, அரேபியாவில் இருந்து இருபது கப்பல்களே சென்று வந்தன. ஆனால் இப்பொழுது அராபிய தீபகற்பத்திலிருந்து நாளொன்றிற்கு ஒரு கப்பல் வீதம் கிழக்கு நோக்கி பயணம் தொடங்கியது.[1] ஜூன் ஜூலை மாதம் மேற்கு நோக்கித் தொடங்கும் கடற்பயணம், தென்கிழக்கு பருவக் காற்று எழுகின்ற டிசம்பர் - ஜனவரி மாதங்களில், முடிவு பெற்று கப்பல்கள் தாயகம் திரும்பின.

கி.பி. முதல் நூற்றாண்டில், கீழ்த்திசையில் பயணம் செய்த “பெரிபுலூஸ்” நூலின் ஆசிரியரது குறிப்புகளும், கி பி. இரண்டாம் நூற்றாண்டில் பயணம் செய்த தாலமியின் பயணக் குறிப்புகளும் இந்த விவரங்களைத் தருகின்றன. உரோமர்களது தமிழ் நாட்டுடனான வாணிபம், அப்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அவர்கள் இங்கு கொணர்ந்து விற்ற சாமான்களைவிட, இங்கிருந்து வாங்கிச் சென்ற சாமான்களின் பெறுமானம், பண்டமாற்று மதிப்பில் கூடுதலாக இருந்தது. அதற்கு ஈடாக, அவர்கள் நாட்டுப் பொற்காசுகளைக் கொடுத்தனர் இங்ஙனம் கீழ்நாட்டுப் புதுமைப் பொருட்களை மிகுதியாக வாங்கிக் கொண்டு சென்றதன் காரணமாக ரோமநாட்டு கருவூலம் வற்றி வறண்டுவிட்டதாக பெட்ரோனியஸ் என்ற ரோம நாட்டு ஆசிரியர் குறித்துள்ளார்.[2] தமிழகத்தை உரோமர்கள்


  1. Oakeshott W.F. - Commerce and Society (1936) P.32.
  2. Pilini - Book = Chap 26.