பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


இபுனுருஸ்தா, பாண்டிய மன்னனை அபிதி, அல்-காய்தி என்றும் சேர மன்னனை அரிதி, பரிதி என்றும், இபுனு குர்த்தாபே சோழனை செயில்மான் என்றும் குறித்துள்ளனர். அவரது குறிப்புகளில் இருந்து மதுரைப்பாண்டியன் அப்பொழுது மிகுந்த வலிமையுடன் விளங்கியதாகத் தெரிகிறது. அவனிடம் எழுபதினாயிரம் போர்மறவர்கள் இருந்தனர். ஆனால் பொதுவாக பாண்டியனை விட சோழன் போர்த்திறன் படைத்தவனா மதிக்கப்பட்டான்.[1] மேலும், பாண்டியனிடத்தில் யானைகள் இல்லாததால் ஐந்து குயூபிக் அடி உயரத்திற்கு அதிகமான யானைகளை ஆயிரம் தினாரா வீதம் விலை கொடுத்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[2] அப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் மந்திரசாலங்களில் நம்பிக்கை வைத்து இருந்தனர் என்றும் மனோவசிய சக்தியினால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன், மழை, குளிர் ஆகிய இயற்கை நிகழ்வுகளையும் தடைபடுத்த இயலும் என அவர்கள் எண்ணியதாக குர்த்தாடே வரைந்துள்ளார்.[3]

மற்றொரு பயணியான மசூதிபாண்டிய மன்னனை அல்காய்தி எனக் குறிப்பிட்டு இருப்பதுடன், அவனது கோநரான மதுரையை மந்தர்பின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.[4] மதுரைக்கும் கொல்லத்திற்கும் இடையில் சூடன் மரங்கள் மிகுந்து காணப்படுவதாகவும் வரைந்துள்ளார்.[5] இவர் கன்னியாகுமரியைப் பற்றித் தெளிவாள குறிப்புக்களைக் கொடுத்துள்ளார். அந்தப்பகுதி, இலங்கைக்கு (செரந்தீவு) எதிர்க்கரையில் அமைந்து இருப்பதாகவும், ஆதி பிதாவான ஆதம் (அலைஹிவசல்லம்) அவர்களுடைய மகன் காய்ன் வழிவந்த மக்கள் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் என்றும், பற்களைத் துலக்க அவர்கள் மரக்குச்சி


  1. |bid р. 168
  2. Md. Hussain Nainar–Arab Geogrep hers Knowledge of S. India (1942
  3. |bid - p. 121, 134
  4. Ibid – p. 173
  5. Ibid - p. 173