பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

களைப் பயன்படுத்தியதாகவும் வரைந்துள்ளார். பெரும்பாலும் மலைகள் நிறைந்து இருப்பதால் மக்கள் கால்நடையாகவே செல்கின்றனர் என்ற குறிப்பும் காணப்படுகிறது.[1] பாண்டியனது பட்டத்து யானையைப் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது அந்த யானை மிகப் பெரியதாகவும் வெள்ளை நிறமாகவும் இடை இடையே கறுப்பு புள்ளிகளுடனும் காணப்பட்டதாகவும் அதன் பெயர் "நம்ரான்” எனவும் வரைந்துள்ளார்.[2]நம்பிரான் என்ற பெயர் அந்த யானைக்கு சூட்டப்பட்டு இருக்கலாம்.

இன்னொரு பயணியான இபுனுல் பக்கி, கன்னியாகுமரி ஆலயத்தில் விக்கிரக வழிபாடு நடைபெற்று வந்ததையும் வரைந்து இருக்கிறார்.[3] அவரை அடுத்து, கன்னியாகுமரி பகுதிக்கு வருகை தந்த இபுனுருஸ்தா என்பவர் , அங்கிருந்த அரசன், மிகவும் நேர்மையானவன் என்றும், குடி விபச்சாரம் போன்ற பழிச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கி வந்தான் என்றும், குற்றங்களை ஆய்வு செய்து தண்டனை வழங்க எண்பது நீதிவான்கள் அவனது பணியில் இருந்தனர். என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னரது மகனாக இருந்தாலும் நீதி (வான்கள் முன்னர் குற்றவாளிக் கூண்டில் நின்று பதில் சொல்ல வேண்டிய முறை இருந்தது என்றும் அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.[4] மேலும், பாண்டிய மன்னனுக்கு யானைகளை வாங்கும் பொழுது, காடுகளில் பெருந்தீயினூடே அச்சமின்றி ஓடும் யானைகள் தான் போர்களுக்குப் பொருத்தமானது என தேர்வு செய்யப்பட்டனவென்றும் வரைந்துள்ளார்.[5]

இவரையடுத்து, தமிழகம் வந்த அல்பரூனி இந்தியாவின் பல பகுதிகளையும் குறிப்பிட்டு வரையும்பொழுது இராமேசுவரம் சேது அணை, சிரந்தீவுக்கு (இலங்கை) எதிர்க்கரையில் இருப்பதாக வரைந்துள்ளார்.[6] இவர்கள் அனைவரையும் விட


  1. Ibid - p. 176
  2. Ibid p. 159
  3. Ibid p. 17S
  4. Ibid p. 109
  5. Ibid р. 169
  6. Nilakanta Sastri - Foreign Notices of s. India (1972)р, 132.