பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இத்தகைய விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் உள்நாட்டு சந்தைக்குரிய பொருட்கள் வாங்கப்பட்டன. கீழைக்கோடியில் உள்ள சீன நாட்டில் உற்பத்தியான பொருள், மேலைநாட்டில் பரவத்தக்க வகையில் வியாபாரம் நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த உலகம் இத்தகைய வியாபாரத்தைக் கண்டதில்லை. . . . . . மாலிக் இ-ஆஜம் தக்கியுத்தின் மாலிக்குல் இசுலாம் ஜமாலுத்தீன் ஆகிய இரு நிபுணர்களது உயர்வும், சிறுப்பும் மாபாரை விட இந்தியாவின் இதர பகுதிகளில், பெரும்அளவில் மதிக்கப்பட்டது. தொலைதுாரத்து மன்னர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு தோழமையுடன் பழகி வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வெளியிட்டு, அடிக்கடி மடல்கள் அனுப்பி வந்தனர்.’’

இவ்விதம் அரபுப் பயணிகள், கண்டதையும் கேட்டதையும் அவர்களது பயணக் குறிப்புகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும் கிராமங்களில், உண்மையை பெறுவதற்கு காய்ச்சிய எண்ணையில் கையை நனைக்கச் செய்தல், காய்ச்சிய இரும் புக்கம்பியை கையில் துரக்கிக் கொண்டு நடத்தல் ஆகிய மூட நம்பிக்கைகள் முந்தைச் சமுதாயத்திலும் இருந்ததை சுலைமான், இபுனுபதுரதா ஆகியோரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1] தாடி, மீசை வைத்துக் கொள்ளுதல், காதுகளைத் துளையிட்டு கடுக்கன் அணிந்து கொள்ளுதல், பொன்னாலான கம்பிகளை, வளையல்களை அணிதல், போன்ற பழக்க வழக்கங்களை இபுனு பதூதா குறிப்பிட்டுள்ளார். அன்றைய தமிழகத்தில் பேணப்பட்டு வந்த இந்தப் பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகிய வைகளைத் தெரிந்து கொள்வதற்கும், இஸ்லாம் என்ற புத்தொளி தமிழ்ச் சமுதாயத்தில் புகுந்து ஊடுருவிய நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரபு நாட்டு பயணக் குறிப்புகள் பயன்படுகின்றன.


  1. Ibid