பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139


இந்த வகையான அரபு நாட்டு நாணயங்கள், தமிழகத்தில் செலாவணியில் இருந்ததை சான்று பகரும் பழமையான கல்வெட்டுக்கள் பல உள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் திருத்தளியாண்ட நாயனார் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் பாண்டிய மன்னர் மாறன் சடையனது (கி.பி.792-835) பத்தாவது ஆட்சியாண்டில், ஆந்தனப் பெண்மணியொருத்தி அந்தக் கோயிலில் விளக்கெரிக்க பத்து “தினார்களை” வழங்கிய செய்தி உள்ளது.[1] இதனைப் போன்று திர்கமும், "திரம்மா" என சோழர்களது பழங்காசுடன் இணைத்து வழங்கப்பட்டது. கி. பி. 985ம் ஆண்டு உத்தம சோழனது ஆட்சியில் திருக்கொம்பியூர் கல்வெட்டில் "அஞ்சு வண்ணத்தால் வந்த ஈழக்காசு" என்ற தொடர் காணப்படுகிறது "பொலியூட்டாகக் கொண்ட பழங் காசு முக்காலே மாகாணியால் பொலியும் திரமம் நன்னே காணும். "... ... ... ... ... ... ... .... கடனுக்கு திங்கள் காசு திரமம் பலிசை பொலிவதாக ... ... .... ...." "இரவு சந்தி விளக்கெரிய வைக்க திரமம் நாலும் ... ... ..." என்பன ராஜராஜ தேவனது தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுபவையாகும்.[2] திருவிடந்தை, திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களில் படியெடுக்கப்பட்ட விக்கிரம சோழ தேவரது கல்வெட்டுக்கள் கி.பி. 1122, 1131 ல் சோழ நாட்டில் திர்கம் (திரம்மம்) புழக்கத்தில் இருந்ததை நினைவூட்டுகின்றன. கி.பி. 1246ம் ஆண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டும் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றன.[3] குலோத்துங்க சோழ தேவரது 36வது ஆட்சியாண்டு குடுமியாமலைக் கல்வெட்டு, ".... .... அடைக்காய முதிற்கு இலையமுது, இட, திருமெய்ப்பூச்சிற்கு 48வது முதல் திங்கள் அஞ்சு திரமமாக ஆட்டறுபது திரமமும் இறுக்கக்கட வார்களாகவும்" என முடிகிறது. இன்னும், பாண்டிய நாட்டில் திர்கம் நாணயம் செலாவணி பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், தமது ஆங்கில நூலான "பாண்டியப் பேரரசில்" வரைந்துள்ளார்.[4] மற்றும் பாண்டிய மன்னர்கள் சடையவர்மன்,


  1. A. R. 136/1908 - திருப்புத்துார்.
  2. நாகசாமி ஆர். தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் (1968)
  3. தமிழ்நாடு தொல்பொருள் துறைகல்வெட்டுஎண் 1976/105-78
  4. Nilakanta Sastri K.A - Pandia kingdom (1929) p. p. 98, 193, 196, 118, 123, 143, 217