பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கொண்டு முகலாயப் படைகளை எதிர்த்தவர்கள் கூட முகலாயப் படை பலத்தின் முன்னே இலவம் பஞ்சைப் போல பறந்தோடி மறைந்தனர். அல்லது இனத் துரோகிகளின் வஞ்சனையால் எளிதில், காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டனர். ஆனால், செஞ்சிக் கோட்டை கி.பி. 1714 இல் தில்லி ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நின்றது. தேசிங் (தேஜ் சிங்) மன்னனது சுதந்திர ஆர்வம் இறுதிவரை குறையவில்லை. ஆனால் கோட்டைக்குள் இருப்பில் இருந்த எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை. முடிவு முற்றுகையைத் தகர்க்க இறுதிப்போர் தொடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்ற நிலை. எதிரிக்கு அடிபணிந்து வாழ்வதைவிட மாற்றானை எதிர்த்து மோதி மடிந்து விடுவது புனிதமானது என தேசிங்கு மன்னன் முடிவு செய்தான். தனது முடிவை தனது உயிர்த் தோழன் மஹமத்கானுக்குச் சொல்லி அனுப்பினான்.

அப்பொழுது மஹமத் கான் வழுதாவூரில் மனமேடையில் இருந்தான். மங்கல வாத்தியங்கள் முழங்கிய இனிய ஓசையை மறைத்து, போர் முரசின் படபடப்பு கோட்டை மதில்களில் இருந்த போர் முரசுகள் அதிர்ந்தன. தனது வாழ்க்கைத் துணைவியின் கரம் பற்றும் மங்கல விழாக் கற்பனைகளில் ஆழ்ந்து இருந்த அவனது சிந்தனையை அந்தப் போர்ப்பரணி கலைத்தது. அவ்வளவுதான் மகமத்கான் வீறு கொண்டு எழுந்தான். வாளையும் வேலையும் அவனது கரங்கள் விரைந்து ஏந்தின. அவனது, மனக்கோலம் இமைப்பொழுதில் போர்க்கோலமாக மாறியது. ஆட்டுக்கிடையிலே புகுந்த அரிமா போல போர்க் களத்தில் புகுந்தான். தனது உயிர்த் தோழனான தேசிங்கிற்கு உறுதுணையாக நின்று போராடினான். தனது நண்பனைச் சூழ்ந்த முகலாயப் பெரும்படையைச் சின்னா பின்னமாக்கினான். என்றாலும், புற்றிசல் போல புறப்பட்டு வந்த எதிரிகளின் ராட்சத தாக்குதலின் முன்னால், ஆற்றலும் பேரார்வமும் மிக்க அந்த இளைஞனது போராட்டம் எடுபடவில்லை. பாரதப் போரில் வீழ்ந்த பிதாமகர் பீஷ்மரைப்போல, செஞ்சிப்போரிலே மகபத்கான் மடிந்து தியாகியானான்.[1] நாட்டுப்பற்றுடனும் நட்புணர்வுடனும் போராடி மடிந்த தேசிங்கு ராஜாவின்

  1. Srinivasachari - History of Gingi Fort,