பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

இராமநாதபுரம் கிழக்கு கரையில் உயிர் தப்பி கரை ஏறினார். பின்னர், மதுரை சுல்தானது உதவியுடன் தனது பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர் சில நாட்கள் மதுரையிலும் பின்னர் “பவித்திர மாணிக்கப்பட்டினத்திலும்” தங்கினார். கி.பி. 1344ல் இந்தப்பட்டினத்தை அவர் அரபு மொழியில் சுருக்கமாக "பத்தன்" என்று குறிப்பிட்டு இருப்பதுடன் அந்தச் சோனக சாமந்தப்பள்ளியை “முற்றிலும் கல்லாலான அழகிய பள்ளி” என தமது குறிப்புகளில் வரைந்துள்ளார்.[1] இன்றைய திருப்புல்லாணி கிராமத்திற்கு அண்மையில் உள்ள பெரியபட்டினம் என்ற ஊரில் உள்ள கல்லாலான பள்ளியைத் தான், அவர் அங்ஙனம் குறித்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகமாகும். இதற்கு பொருத்தமான பலதடையங்கள் அங்கே உள்ளன.[2] பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று இருந்த இந்த கடற்துறை, கடந்த ஆறு நூற்றாண்டுகளில், காலக்கோளினால் சிதைந்து பூம்புகாரைப்போன்று சிற்றுாராக சிறுமையுற்றதினால் அங்குள்ள இந்தப் பள்ளி சிதைந்து புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் தொழுகைக்கூடம் மட்டும் அப்படியே இருந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள பதினெட்டு கல்தூண்களை மட்டும், ஆதாரமாகக் கொண்டு அந்தப் பள்ளியின் கட்டுமான வகையை கணிப்பது இயலாத ஒன்றாகும். ஆனால் அந்த துண்களின் அமைப்பில் இருந்து அந்தப் பள்ளிவாசல் தொன்மையானது என்பது மட்டும் உறுதியாகிறது.

இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த இன்னும் இரண்டு பள்ளி வாசல்கள் பாண்டியரின் தலைநகரான மதுரையில் உள்ளன. முதலாவது மதுரையின் தென்மேற்கு மூலையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள சிறிய தொழுகைப் பள்ளியாகும். பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக் கப்பட்ட தென்றும், இதனைப் பராமரிக்க அந்த மன்னனால் மதுரையை அடுத்துள்ள விரகனுார் புளியங்குளம் வழங்கப்பட்வழங்கப்பட்


  1. Nilakanta Sastri-Foreign Notices of South. India (1972)р. 281.
  2. கமால் எஸ்.எம். - தமிழக வரலாற்று கருத்தரங்கு (1978)பக்கம் : 308 : 310