பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

டுள்ளது. என்றும் தெரிய வருகிறது.[1] பள்ளியின் கட்டுமானம் நீண்ட சதுர வடிவில் திராவிட கட்டுமான பாணியில் அமைக்கப்பட்ட கல்துரண்களுடன் காட்சி அளிக்கிறது. ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்ட பள்ளி சிதைவுற்றதால், அங்கு நாயக்கர் ஆட்சியின் பொழுது இந்தக் கட்டுமானம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும். மற்றது மதுரைப் பெருநகரின், வைகை ஆற்றில் வட கரைக்கு அணித்ததாக உள்ள கோரிப்பாளையம் சுல்தான் அலாவுதீன் அவர்களது தர்காவாகும். கி.பி. 1050ல் மாலிக்-உல் முல்க் என்ற தளபதியுடன் சமயப் பணிக்காக மதுரை வந்த ஹஜரத் சுல்தான் அலாயுத்தீன் என்ற இறை நேசரின் அடக்க இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள கட்டுமானமாகும். இதனை சுல்தான் அலாவுதீன் தர்கா என மக்கள் வழங்கி வருகின்றனர். இஸ்லாமிய கட்டுமான முறையில் கீழே விரிந்து மேலே சுருங்கிய கும்பாஸ் (குப்பா) அமைப்பில் காட்சியளிக்கிறது தரைமட்டத்திலிருந்து இருபத்து இரண்டு அடி உயரத்தில் முடிவு பெறும் இந்த கும்பாஸ் அறுபத்து ஒன்பது அடிகற்றளவில் சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பாஸ் முழுவதும் ஒரே கல்லால் அமைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது.[2] இத்தகைய கும்பாஸ் முறை அடக்கவிடங்கள் கீழக்கரை ஜாமியா மஸ்ஜிது பள்ளியின் எதிர்புறத்திலும், ஏறுபதி சுல்தான் இப்ராகீம் ஷஹீது (வலி) அடக்கவிடத்திலும், இராமநாதபுரம் நூர் சாகிப் (வலி) அடக்கவிடத்திலும், புதுக்கோட்டைக்கு அண்மையில் காட்டுபாவா சாகிபு அடக்க விடத்திலும் உள்ளன. மற்றும் தொண்டி திறப்புக்காரர் தர்கா, புனித சேகு அபுபக்கர் சாயபு, முத்துராமலிங்கப்பட்டினம் புனித சையது முகம்மது சாயபு, பாசிப்பட்டினம் புனித நெய்னா முகம்மது சாகிபு தர்கா, கோட்டைப்பட்டினம் புனித ராவுத்தர் சாயபு. முத்துப்பட்டினம் புனித சேகு தாவுது, அதிராம் பட்டினம் புனித ஹாஜா அலாவுதீன் அடக்க இடங்களும் கும்பாஸ் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் இவை பிற்காலத்தில் - சுமார் மூன்று நூற்றாண்டு கால இடைவெளியில் நிர்மாணிக்கப் பட்டவை.


  1. Hussaini S.A.O. Dr. History of Pandia Kingdom (1952) p. 55
  2. Hursaini. S. A. Dr – History of Pandiya Kingdom (1952)