பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

பின்னர் கி.பி. 1573 ல் மதுரை மன்னரான முத்துவீரப்ப நாயக்கரால் தீர்வு பெற்றதை மதுரை கோரிப்பாளையம் கல்வெட்டு அறிவிக்கிறது.[1]

வணிகர்களாக வந்த சோனகர், நாளடைவில் இந்த மண்ணின் மாண்புக்குறிய மக்களாக நிலைத்துவிட்டனர், அவர்களுக்கு பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியிலும், பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது நூற்றாண்டில், பிற்காலப் பாண்டிய அரசுகளிலும், நல்ல சமூக சூழ்நிலைகளும் அரசியல் ஊக்குவிப்புகளும், உதவின. "தஞ்சைப் புறம்பாடி ராஜ்ய வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" (சாமுன் என்று இருத்தல் வேண்டும்) என்ற ராஜராஜ சோழனது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டிலும் "திருமந்திர ஓலை நாயகனான கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" என ராஜேந்திர சோழனது கோலார் கல்வெட்டிலும் சோனகரது பெருந்தலைவர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கு, "இராஜேந்திர சோழபுரத்து இராச விச்சாதீரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர் பரஞ்சோதியான சோழ சுந்தர்வப் பேரரயன்" எனப்புகழுரை சூட்டப்பட்டுள்ளது.[2] சோழர்களது பேரவையை அலங்கரித்த இந்தச் சோனகரைப் போன்று, பாண்டியரது அரசியல் பணியிலும் சோனகர் ஒருவர் சாமந்தராக இருந்தார் என்பதை திருப்புல்லாணி கோயிலில் உள்ள கோனேரின்மை கொண்டானான பாண்டியன் சடையவர்மனது எட்டாம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. பாண்டிய படைப்பிரிவின் சாமந்தனரக விளங்கிய சோனகர் ஒருவர் பெயர் அறியத்தக்கதாக இல்லை பவுத்திரமாணிக்க பட்டினத்தில் அமைத்த பள்ளிக்கு நிவந்தமாக ஆம்புத்துார் மருதூர் முதலான ஊர்களை இறை இலியாக இருந்து வர பாண்டியன் கோனேரிண்மை கொண்டான் ஆணை இட்டான். இந்த ஆணை,

"... ... ... கீட் செம்பிநாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் கீழ்பால் சோனக சாமந்தப் பள்ளியான பிழார்ப்பள்ளி


  1. A. R. 77/1905 கோரிப்பாளையம்.
  2. A. R. 402 / 1903 திருப்புல்லாணி