பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

ஆழ்வாருக்கும், இவர் செய்ய திருவாய் மலர்ந்தருவிய படிக்கு .... .... ...." என நீண்டு தொடர்கிறது.[1]

பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருக்களர் கல்வெட்டு, பாண்டியரது, அரசு கட்டிலுக்கான போட்டியில் பாண்டிய நாட்டு முஸ்லீம்கள், சுந்தர பாண்டியனைச் சார்ந்து நின்று உதவிய உண்மையை வெளிப்படுத்துவதுடன் அந்த உள்நாட்டுப் பூசலினால் உருக்குலைந்த தமிழகத்தையும் அந்தக் கல்வெட்டுத் தொடர் கீழ்க்கண்டவாறு உணர்த்துகிறது.[2]

".... ... .... .... முன்னாள் இராஜராஜன் சுந்தர பாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளிலே, ஒக்கூருடையாரும், இவர் தம்பிமாரும், அனைவரும், அடியாரும் .... ... .... செத்தும் கெட்டுப் போய் அலைந்து, வரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாய் இருக்கிற அளவிலே .... ..." என்று இதே காலத்தில் தென்பாண்டி நாடு சேர மன்னன் உதயமார்த்தாண்டனது ஆட்சியில் அமைந்து இருந்தது. அங்கும் இஸ்லாமியர் அரசின் ஆதரவுக்கு உகந்தவர்களாக இருந்தனர் என்பதை காயல்பட்டின கல்வெட்டு ஒன்றிலிருந்து தெரிகிறது. அந்த கல்வெட்டின் வாசகம்,

"சோனாடு கொண்டான் பட்டினத்து ஜும்மா பள்ளிக்கு உதய மார்த்தாண்டப் பெரும்பள்ளி எனப் பெயருங் கொடுத்து அவ்வூரில், காதியாரான அவூவக்கருக்கு உதய மார்த்தாண்ட காதியார் எனப் பேரும் கொடுத்து இந்தப் பள்ளிக்குச் சுவந்திரமாக இந்த சோனாடு கொண்டான் பட்டினத்துறையில், ஏற்றுமதி இறக்குமதி கொள்ளும் பொருளிலும், விலைப்படி உள்ள முதலுக்கு நாலு பணத்துக்கு கால் பணமாக உள்ள விழுக்காடு கொள்ளும்படி ... ... ... ..."[3]ஆணையிடுகிறது.

கி.பி. 1330-78 வரை மதுரையில், தன்னாட்சி செய்த சுல்தான்களின் ஆட்சிக் காலத்து பொறிக்கப்பட்ட நான்கு கல்வெட்


  1. A. R. 112 / 1905 மன்னர்கோவில்
  2. A R 642 / 1902 திருக்களர்.
  3. A. R. 311 / 1964 - வீரபாண்டியன் பட்டினம்