பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

டுக்கள் இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கிடைதுள்ளன. அதுவரை தமிழக கல்வெட்டுக்கள் வரையப்பட்டுள்ள வகையினின்றும் அவை, மாறுபட்டுள்ளன. அவைகளில் இருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"இராசாக்கள் தம்பிரானுக்கு 761 () பங்குனி மாதம் 5ம் தேதி பொன்னமராவதி நாட்டு நாட்டாரோம் விரையாச் சிலை உள்ளிட்ட ஊரவருக்கும் கோட்டியூர் உள்ளிட்ட ஊரவரும் பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது

"இராசாக்கள் தம்பிரானார் சூரக்குடி அழியச் செய்வதாக மஞ்சிலிக எலிசுகானை , ஆசம் காத்தானை, முஸாக் கான்கானை, இராசாத்தி கானுடனே பரிகாரம் ஏவப்பட்டு, சூரக்குடியும் அழியச் செய்து, மாத்துார் குளத்திலே விடுதியா விரைச்சிலை, கோட்டியூர் ஊரவர்களைக் கானச் சொல்லி அருளிச் செய்தபடியாலே, இவ்வடிகள் கண் அளிவுக்கு இராசாக்கள் தம்பிரானார் தோசது கானுக்கும் எங்களுக்கும் பிரமாணம் வரகாட்டி அருளினபடி ... ... ..." [1]

" ... ... .... ஆதி சுரத்தானுக்கு .... ... சித்திரை .... தியதி பூர்வபட்சத்து ஏகாதேசியும் திங்கட் கிழமையும் பெற்ற பூசத்து நாள் பொன்னமராவதி நாட்டு இராசிங்கமங்கலத்து ஊராக

"இசைந்த ஊரவர்க்கு கானநாடான விருதராச பயங்கர வளநாட்டு ஆதனுார் ஊராக இசைந்த ஊரோம் காவல் பிரமானம் பண்ணிக் கொடுத்த பரிசாவது துலுக்கர் கலகமாய் எங்குங்

"கட்டாளும் பிடியாமல் பரிகரித்து வேறு ஒருவர் இவ்விடங்களில் நிலை நரருங் கொள்ளாமல் பரிகரித்து "கள்வனுார் அடித்துக் கொண்டு போன கன்றுங்காலியும் விடுவித்து தந்து

"நாங்கள் இங்கு இருக்குமளவும் சோறு பாக்கும் ஆராய்ந்து எங்களைப் பரிகரித்துக் கொண்டு போக வேணு மென்கிற ... ... .... [2]


  1. திருக்கோலக்குடி கல்வெட்டு
  2. ராங்கியம் கல்வெட்டு