பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வாழ்கின்ற அவர்களது உற்றார் உறவினர்கள் தன்னிச்சையான முறையில் கல்வியும், தொழில் முன்னேற்றமும் காண்பது எப்பொழுது? அறிவும் ஆற்றலும் பெற்றுள்ள ஏனைய சிறுபான்மை பெரும்பான்மை மக்களுடன் இவர்களும் இணைந்து தேசிய உணர்வும் ஒருமைப்பாடும் பெறுவது எவ்விதம்?. . . . . .

தமிழக இஸ்லாமியரைப் பற்றிய இக்கட்டான இந்த வினாக்களுக்கு விடைகள் வழங்க வேண்டியது எதிர்காலம். என்றாலும்; “பழங்கால மேகங்கள் வருங்கால மழை படைக்கும்” என்று கவிஞர் ஒருவரது வாக்கிற்கிணங்க பழமையில் நனைத்தால்தான் புதுமைகள் புலப்படும், வரலாற்று உணர்வும் பழமை பற்றிய சிந்தனைகளும் அவைகளை ஊக்குவிக்கும் என்ற கருத்தில், போக்கில் தமிழக இசுலாமியரை பல புதிய வரலாற்று, இலக்கியத் தடயங்களுடன் எடுத்துக் காட்டுவது இந்த தொகுப்பு. இது ஒரு தொடக்க முயற்சி.

எனினும் வரலாறு தொடர்கிறது. ... ...