பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

2. பாரூக் வம்சத்தார் 43 பேர்
நாச்சியார் பெண்டுகள் 16 பேர்
பெண்கள் 9 பேர்
அடிமைகள் 7 பேர்
3. பாக்கீர் வம்சத்தார் 39 பேர்
நாச்சியார் பெண்டுகள் 24 பேர்
அடிமைகள் 12 பேர்
4. உமையா வம்சத்தார் 14 பேர்
நாச்சியார் பெண்டுகள் 5 பேர்
அடிமைகள் 5 பேர்
இராணுவ வீரர் 16 பேர்
க்ஷவரகர் 3 பேர்

மொத்தம் 226 பேர்

இந்தச் செய்தியை வரலாற்று ஆசிரியர் கர்னல் வில்க்ஸும் தமது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.[1] எட்டாவது நாற்றாண்டின் துவக்கத்தில் ஈராக் ஆளுநராக பஸ்ராவில் இருந்த ஹிஜாஜ் பின் குஸாம், ஹாஸிம் குலத்தவரை, தாயகத்தை விட்டு ஓடி உயிர் தப்பும் அளவிற்கு கொடுமைப்படுத்தியதாக அந்த நூலில் வரைந்துள்ளார். இவர்களைப் பின்பற்றி பிறிதொரு அணியினர், அரேபியாவின் அதிபதியாக இருந்த அப்துல்லா மாலிக் பின் மர்வானது கொடுங்கோலுக்குத் தப்பி அரேபியாவின் தென்பகுதி வழியாக இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையை அடைந்தனர். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியரது இன்னொரு ஆவணத்தின்படி, காயல்பட்டினத்தில் அரபி முஸ்லீம்கள் கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டில், அரபித் தாயகத்தில் இருந்து குடியேறி, அங்கு அறுபத்து நான்கு தொழுகைப் பள்ளிகளை அமைத்தனர் என்றும், தென்னை, பனைமரத் தோப்புகள் பலவற்றை ஏற்படுத்தினார் என்றும் தெரிகிறது. இவர்களும் இவர்களது வம்சா வளியினரும், சோழ மண்டலத்தின் எதிர்க் கரையான ஈழத்துடனும் வணிகத் தொடர்புகளைப்


  1. Col-wilks - Historical sketches of south India (1810)