பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27


3

துலுக்கர்

இவர்களை, பிற்காலத் தமிழ் இலக்கியங்கள் சோனகர் எனவும், துருக்கர் எனவும், ராவுத்தர் எனவும், இனம்பிரித்துக் காட்டியுள்ளன. இந்தச் சொல் தமிழகத்தில் பதினோராவது நூற்றாண்டிலேயே வழக்கில் இருந்தமைக்குச் சான்றாக பதினோராவது நூற்றாண்டு இலக்கியமான ஜெயங்கொண்டாரது கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுரம் மாளிகையில், முதற்குலோத்துங்க சோழ மன்னனுக்கு திறையளந்த நாற்பத்து எட்டுத் தேய மன்னர்களின் பட்டியலில் “துருக்கரையும்” சேர்த்துள்ளது[1] அதே மன்னன் மீது புனையப்பட்டுள்ள பிள்ளைத் தமிழில், கவியரசு ஒட்டக்கூத்தரும் துருக்கரைப்பற்றிய குறிப்பினைத் தருகிறார்.[2] மகாகவி கம்பனது இராமாவதாரமும் “துருக்கர் தரவந்த வயப்பரிகள் ....” என துருக்கர்களைக் குறிப்பிட்டுள்ளது.[3] துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துலுக்கர் - எனவும் மருவி வழங்கியுள்ளது. இந்தச்

  1. புலவர் ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணி பாடல் 333

    வத்தலர், மத்திகர், மாளுவர்
    மாகதர் மச்சர் மிலேச்சர்களே
    சூத்திரர் குத்தர் குடக்கர்
    பிடக்கர் குருக்கர் துருக்கர்”

  2. கவியரசு ஒட்டக்கூத்தர்; குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் (முத்தபருவம் பாடல் எண் 52
  3. மகாகவி கம்பன் – இராமாவதாரம் பாலகாண்டம் : வரை காட்சி படலம் பாடல் எண் : 208.