பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

3. துலுக்கபட்டி   விருதுநகர் வட்டம்
4. துலுக்கன் குளம்   நெல்லை வட்டம்
5. துலுக்கன் குளம்   ராஜபாளையம் வட்டம்
6. துலுக்கன் குளம்   அருப்புக்கோட்டை வட்டம்
7. துலுக்கன் குறிச்சி   முதுகுளத்துார் வட்டம்
8. துலுக்க முத்துார்   அவினாசி வட்டம்
9. துலுக்க மொட்டை  கோவை வட்டம்
10. துலுக்க தண்டாளம்   காஞ்சி வட்டம்

பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் “துலுக்கராயன் குழி” என்ற நில அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.[1] இதிலிருந்து துலுக்களில் சிறப்புடையவர் “துலுக்கராயன்” என அழைக்கப்பட்டார் என்பது புலனாகிறது. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். திரிகடராஜப்பகவிராயரது “திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்”[2] இராமநாதபுரம் மன்னர் “திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்”[3] இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல்வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழூர் வட்டம் பணத்தளை என்ற ஊர் “துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது.[4]


  1. வள்ளியம்மை - திருப்புத்துரர் (1981) பககம் 17
  2. "மக்கம், மராடம், துலுக்காணம்,
    மெச்சி குறமகளும் ... பாடல் எண் 63-1
    திரிகூடராசப்ய கவிராயர் - திருக்குற்றால குறவஞ்சி
  3. “வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் ...” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)
  4. A. R. 409, 406 / 1913.